This Article is From Oct 25, 2018

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

AIADMK disqualified MLAs verdict: அதிமுக-விலிருந்து 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் இருக்கும் ஒரு ரிசார்ட்டில் 18 எம்.எல்.ஏ-க்களையும் தங்க வைத்துள்ளார் தினகரன் (TTV Dhinakaran)

Chennai:

அதிமுக-விலிருந்து 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதிமுக-வில் சென்ற ஆண்டு, சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈ.பி.எஸ் அணி பிரிந்தது. சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ் அணி தனியாக சென்றது. சிறிது காலம் கழித்து ஓ.பி.எஸ் அணியும் ஈ.பி.எஸ் அணியும் ஒன்றாக இணைந்தது. ஆனால், தினகரனுக்கு நெருக்கமாக இருந்த 18 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடிக்கு எதிராக அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம், கடிதம் அளித்தனர். அந்தக் கடிதத்தில், 'முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என்று கூறினர்.

spo47oeo

முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர் என்ற காரணத்தை முன் வைத்து, 18 எம்.எல்.ஏ-க்களையும் தன் அதிகாரத்தை வைத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தகுதி நீக்கம் செய்தார் தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால். இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

அதில் இரு வேறு தீர்ப்புகள் வரவே, மூன்றாவது நீதிபதியான சத்யநாரயணனன் வழக்கை விசாரித்தார். வழக்கு விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

3f095l9g

தீர்ப்பில் நீதிமன்றம், '18 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தது செல்லும்' என்று கூறியுள்ளது.

நீதிபதி சத்யநாரயணன் ஆளுங்கட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், ஏற்கெனவே காலியாக இருக்கும் 2 தொகுதிகளை சேர்த்து, 20 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.

தீர்ப்பினால், தமிழக சட்டப்பேரவையின் பலம் 234-ல் இருந்து 214 ஆக குறைந்துள்ளது. இதில் பெரும்பான்மையைப் பெற 107 பேரின் ஆதரவு தேவைப்படும். அதிமுக-வுக்கு தற்போது 116 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது.

.