உலகத்தில் உள்ள 5 பணக்கார செல்லப் பிராணிகள் !

தற்போது வெளியான இந்த பட்டியலில் இடம் பெற்ற செல்ல பிராணிகளைப் பார்த்தால் நமக்கே பொறாமை உண்டாகும்

உலகத்தில் உள்ள 5 பணக்கார செல்லப் பிராணிகள் !

செல்லப் பிராணிகள் என்று சொன்னாலே பலருக்கும் பிடிக்கும். ஆனால், தற்போது வெளியான இந்த பட்டியலில் இடம் பெற்ற செல்ல பிராணிகளைப் பார்த்தால் நமக்கே பொறாமை உண்டாகும்.

'கம்பேர் தி மார்கெட்' என்ற நிறுவனம் சார்பில் வெளியிட்ட இந்தப் பட்டியலில் செல்லப் பிராணிகளை மக்கள் இவ்வளவு நேசிப்பார்களா என்ற ஆச்சரியம் நமக்கு தோன்றும்.

5. ஜிகோ

இந்தச் செல்லப் பிராணி ஒரு கோழியாகும். அதன் மதிப்பு 15 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. ஜிகோ, பிரட்டனைச் சேர்ந்த அதிபர் மைல்ஸ் பிளக்வெலின் செல்லப் பிராணியாக இருந்தது. அவர் தனக்கு பின்னர் ஜிகோவுக்காக தனது உயிலில் 15 மில்லியன் டாலர் பணத்தை தனியாகப் பிரித்து எழுதிவைத்துச் சென்றார்.

4.சேடி, சன்னி,லாரேன்,லயேலா மற்றும் லுக்

ஓஃப்பாரா வின்வேரிஸின் நாய் குட்டிகள் இவை. தனக்கு பின்னர் 30 மில்லியன் டாலர்களை அவற்றுக்காக விட்டுச் செல்ல முடிவு செய்துள்ள ஓஃப்பாரா, இதை தனது உயிலில் எழுதியுள்ளார்.

3. ஒலிவியா பென்சன்

97 மில்லியன் டாலர்களைத் தன்வசம் வைத்துள்ள ஒலிவியா பென்சன், பல விளம்பர படங்களில் நடித்துள்ளது. டேயிலர் ஸ்ஃப்டின் செல்ல பிராணியான இந்த ஸ்காடிஷ் போள்டு பூனையின் மதிப்பு 97 மில்லியன் டாலர்களாக உள்ளது. அதுவே இப்பூனைக்கு மூன்றாவது இடத்தைப் பெற்று தந்துள்ளது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taylor Swift (@taylorswift) on

2. கரும்பி பூனை

நமது தலைமுறையினருக்கு மிகவும் பரிட்சையமான இப்பூனை, தனது முகத்தில் எப்போதுமே சிடுசிடுவேன பாவத்தை வைத்திருக்கும். இதன் மதிப்பு சுமார் 99.5 மில்லியன் டாலர்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Grumpy Cat (@realgrumpycat) on

1. கந்தர் IV

பட்டியலில் முதலிடம் பெற்ற இந்தப் பூனை, ஜெர்மனியைச் சேர்ந்த கவுன்டஸ் கர்லோட்டா லீபெனிஸ்டின் செல்லப் பிள்ளை ஆகும். கந்தர் III என்று பெயரிடபட்ட தனது அப்பாவும் இதே போல் இராஜ வாழ்க்கை வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அதன்படி கந்தர் IV, தனது கணக்கில் 375 மில்லியன் டாலர்கள் உள்ளது.

இதை போல் உங்கள் செலல் பிராணிகளுக்கு என்ன விட்டு செல்ல போரிர்கள்

 

Click for more trending news