This Article is From Dec 03, 2018

சவுதி இளவரசரை பேக்-மேன் என்று கூறிய கஷோக்கி: நண்பரின் ஆதாரம்!

ஒமர் அப்துலாசிஸ், தனக்கு கஷோக்கியிடமிருந்து வந்த ஆடியோ, வீடியோ மற்றும் புகைப்படங்களை பத்திரிகையாளர்களிடம் காட்டினார்.

சவுதி இளவரசரை பேக்-மேன் என்று கூறிய கஷோக்கி: நண்பரின் ஆதாரம்!

கஷோக்கி தனது மெஸேஜ்களில் MBS என்ற வார்த்தையை இளவரசர் முகமது பின் சல்மானை குறிக்க பயன்படுத்தியுள்ளார்.  (File Photo)

Washington:

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி தனது சக நண்பருக்கு 400 வாட்ஸ் அப் செய்திகளை அவரது கொலைக்கு முன்பு அனுப்பியிருந்தது தெரியவந்துள்ளது. அதில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை ''பீஸ்ட்'' மற்றும் ''பேக்-மேன்'' என்று விமர்சித்துள்ளார். இதனை தனது நண்பரான ஒமர் அப்துலாசிஸ்க்கு அனுப்பியுள்ளார்.

ஒமர் அப்துலாசிஸ், தனக்கு கஷோக்கியிடமிருந்து வந்த ஆடியோ, வீடியோ மற்றும் புகைப்படங்களை பத்திரிகையாளர்களிடம் காட்டினார். கடந்த மே மாதம் இன்னும் நிறைய பேருக்கு அவர் தொந்தரவாக இருந்துள்ளார் என்று முகமது பின் சல்மானை பற்றி கூறியுள்ளார்.

"இந்தச் செய்திகள் சவுதி இளவரசரை சென்றடைந்தாலும் நான் கவலைப்படப்போவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.

2017 அக்டோபரிலிருந்து 2018 ஆகஸ்ட் வரை தொடர்ந்து தனது செய்தி பரிமாற்றங்களை அவர்களோடு பகிர்ந்து வந்துள்ளார். அவரது நண்பரான அப்துலாசிஸுக்கு ட்விட்டரில் 3.4 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். கஷோக்கி தனது மெஸேஜ்களில் MBS என்ற வார்த்தையை இளவரசர் முகமது பின் சல்மானை குறிக்க பயன்படுத்தியுள்ளார். 

m2anbhl8

அவர்தான் பிரச்னை; அவரை தடுக்க வேண்டும் என்று கஷோக்கி கூறியதாக அப்துலாசிஸ் சிஎன்என்னுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாதத்திலிருந்து தகவல் பரிமாற்றம் நின்று போனதாகவும். கடைசியாக கடவுள் தான் நமக்கு உதவ வேண்டும் என்று தெரிவித்ததாகவும் கூறினார். 2 மாதங்களுக்கு பிறகு அவர் இற‌ந்துவிட்டார் என்றார். 

மேலும் அப்துலாசிஸ், இஸ்ரேல் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் போன் ஹேக் செய்யப்பட்டதால் தான் கஷோக்கி பற்றிய விவரங்கள் வெளியே சென்றது. நான் சங்கடத்துக்குள்ளாகி உள்ளேன் என்று கூறினார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.