This Article is From Jul 31, 2019

“நேர்கொண்ட பார்வை” படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றும் பிரபல நிறுவனம்!

தணிக்கை குழுவின் தணிக்கை சான்றை பெற்ற இப்படம் ஆகஸ்ட் 8ம் நாள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்து

“நேர்கொண்ட பார்வை” படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றும் பிரபல நிறுவனம்!

ஹைலைட்ஸ்

  • இப்படம் வரும் ஆகஸ்ட்8ல் வெளியாகிறது
  • அஜித்தின் 60வது படத்தை போனிகபூர் தயாரிக்கிறார்
  • பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகும் படத்தை எச்.வினோத் இயக்கியிருக்கிறார்

'நேர்கொண்ட பார்வை' தமிழக விநியோக உரிமையை ஜெமினி பிலிம் சர்க்யூட் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கனவர் போனிகபூர் தயாரித்திருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை'. இப்படம் கடந்த ஆண்டு இந்தியில் வெளியான ‘பிங்க்' படத்தின் ரீமேக் ஆகும்.

இந்த படத்தில் அஜித், வித்யா பாலன், ஷர்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்ந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தணிக்கை குழுவின் தணிக்கை சான்றை பெற்ற இப்படம் ஆகஸ்ட் 8ம் நாள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்து. இந்நிலையில் ஆகஸ்ட் 8-ம் தேதி நெருங்கும் வேளையில் யாருக்கு தமிழக விநியோக உரிமை என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.

முன்னணி நிறுவனங்கள் பலரும் போட்டியிட்ட போது, போனி கபூர் சொன்ன விலையை இந்தப் படம் வசூல் செய்யுமா என்று தயக்கம் காட்டினார்கள். ரெட் ஜெயண்ட் மூவிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இடையே ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து 'மதகஜராஜா' படத்தையும் வெளியிட ஆயத்தமாகி வருகிறது ஜெமினி பிலிம் சர்க்யூட் என்பது குறிப்பிடத்தக்கது.

.