ஊழல் புகாருக்கு ஆளானவர்கள் மீது நடவடிக்கையை கடுமையாக்கியுள்ளது மத்திய அரசு.
New Delhi: ஊழல் புகாருக்கு ஆளான வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் 15 பேருக்கு கட்டாய ஓய்வை அளித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து 2-வது முறையாக பொறுப்பு ஏற்றுள்ளது. நிதியமைச்சராக முன்னாள் நிர்மலா சீதாராமன் இருந்து வருகிறார். வருமானவரி, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரித்துறை அதிகாரிகள் மீது அவ்வப்போது ஊழல் புகார்கள் வருவது உண்டு.
இந்த நிலையில் ஒருவாரத்திற்கு முன்பாக லஞ்ச புகாருக்கு ஆளான வரித்துறை அதிகாரிகள் 12 பேருக்கு கட்டாய ஓய்வை அளித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்த விவகாரம் நிதித்துறை, வரித்துறைகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மேலும் 15 உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வளித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சர்வதேச அளவில் ஊழல் குறைவானதை அடிப்படையாக கொண்டு 180 நாடுகளை உள்ளடக்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா 3 இடங்கள் முன்னேறி 78-வது இடத்தை வகிக்கிறது.