This Article is From Nov 18, 2018

‘மழை தொடரும்..!’- தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

வங்கக் கடலில் உருவான ‘கஜா’ புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது

‘மழை தொடரும்..!’- தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

வங்கக் கடலில் உருவான ‘கஜா' புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வங்கக்கடலில் நிலைகொண்ட கஜா புயல் நேற்று நள்ளிரவில் நாகை - வேதாரண்யத்திற்கு இடையே கரையைக் கடந்தது. கஜா புயல் கரையைக் கடக்கும் போது வீசிய கடுமையான காற்றினால், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்ட பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் பல பகுதிகளில் மின் கம்பங்களும், மரங்களும் சாய்ந்துள்ளன. கஜா புயல் காரணமாக 3 மாவட்டங்களில் சுமார் 12,000 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அதிகபட்சமாக தஞ்சை மாவட்டத்தில் 5,000க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சேதங்கள் குறித்து தொடர்ந்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

நேற்று திண்டுக்கல் அருகில் கஜா புயல் நிலைகொண்ட போது, அது காற்றுழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இன்று தென்கிழக்கு அரபிக் கடல் மார்க்கமாக நகர்ந்து, அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக கஜா புயல் மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக மாறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போதைய வானிலை குறித்து மிகவும் பிரபலமான வானிலை கணிப்பாளர் தமிழ்நாடு வெதர்மேன், ‘சென்னையில் சில இடங்களில் மழை பெய்து வருவதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளில் மழை பெய்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனக்குத் தெரிந்து சென்னையில் நாளையும் மழை தொடர வாய்ப்புள்ளது.

கஜா புயல் காரணமாக திண்டுக்கல்லின் கொடைக்கானல் போட் கிளப்பில் 197 மி.மீ மழையும், சிவகங்கையில் 170 மி.மீ மழையும், புதுக்கோட்டையில் குடிமியாமலையில் 154 மி.மீ மழையும் பெய்துள்ளது' என்று தகவல் தெரிவித்துள்ளார்.

.