This Article is From Jan 13, 2019

பத்திரிகையாளர் மேத்யூவை கைது செய்ய டெல்லி விரைந்தது தனிப்படை

கொடநாடு எஸ்டேட் காவலாளி உள்பட 5 பேர் கொலை வழக்கு தொடர்பாக தெஹல்கா புலனாய்வு இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பத்திரிகையாளர் மேத்யூவை கைது செய்ய டெல்லி விரைந்தது தனிப்படை

கொடநாடு எஸ்டேட் காவலாளி உள்பட 5 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் திட்டவட்டமாக புகார் தெரிவித்துள்ளார். அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அவரை கைது செய்ய தனிப்படை டெல்லி விரைந்துள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை மற்றும் கொள்ளை விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.

மற்றொரு குற்றவாளியான சயான் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். இதில் அவரது மனைவி விஷ்ணுப்பிரியா மகள் நீது ஆகியோர் உயிரிழந்தார். காயங்களுடன் சயான் தப்பினார்.

இதேபோன்று கொடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி ஆப்பரேட்டராக இருந்த தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டார். இந்த 5 உயிரிழப்புகளின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

தெஹல்கா புலனாய்வு இதழின் முன்னாள் ஆசிரியரான அவர், கொடநாடு கொலைகள் தொடர்பாக ஆவணப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அவரை கைது செய்ய தனிப்படை டெல்லி விரைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, மேத்யூ சாமுவேல் தனது முகநூல் பக்கத்தில் தகவல் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில், ''சென்னை மற்றும் டெல்லியில் உள்ள பத்திரிகையாளர் நண்பர்கள் சிலர் என்னை கைது செய்ய தமிழக போலீசார் டெல்லி வந்திருப்பதாக கூறியுள்ளனர். எனது வீட்டை சோதனையிட்டு கே.வி.சயான் மற்றும் வலயார் மனோஜ் ஆகியோரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எனக்கு எதிராக அவதிமப்பு வழக்கை தொடர்ந்துள்ளார். கொடநாடு எஸ்டேட் கொலைகள் தொடர்பாக நான் வெளியிட்ட ஆவணப்படத்தில் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டியிருந்தேன். அதன் அடிப்படையில் என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றில் முதன் முறையாக ஒரு முதல்வர் மீது 5 கொலைகளின் பின்னணியில் அவர் நேரடியாக குற்றம் சாட்டியிருப்பது இதுவே முதன்முறை.

இப்போது விஷயத்திற்கு வருகிறேன். கொடநாடு எஸ்டேட் விவகாரம் தொடர்பாக நடந்த கொலைகளின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் உள்ளார். இந்த நிலைப்பாட்டில் நான் உறுதியாக உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.

.