This Article is From Jan 30, 2019

‘முதல்வர் விவசாயியாக இருப்பதனால்…’- அமைச்சர் செல்லூர் ராஜூ ‘அடடே’ பேச்சு

செல்லூர் ராஜுவிடம், ‘டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து கடன் தள்ளுபடி கேட்டு போராடுகின்றனர். தமிழக அரசின் நடவடிக்கை என்ன’ எனக் கேட்டுள்ளனர். 

‘முதல்வர் விவசாயியாக இருப்பதனால்…’- அமைச்சர் செல்லூர் ராஜூ ‘அடடே’ பேச்சு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியே அடிப்படையில் ஒரு விவசாயி, செல்லூர் ராஜூ

ஹைலைட்ஸ்

  • தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்தார் செல்லூர் ராஜூ
  • விவசாய பிரச்னையில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து அவரிடம் கேட்கப்பட்டது
  • அதற்கு செல்லூர் ராஜூ 'குபீர் ரக' கருத்தைத் தெரிவித்துள்ளார்

தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் விவசாயியாக இருப்பதனால், அவர்களின் கஷ்டங்கள் குறித்து அறிந்து செயல்படுகிறார்' என்று குபீர் ரக கருத்தைத் தெரிவித்துள்ளார். 

சென்னை, தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜுவிடம், ‘டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து கடன் தள்ளுபடி கேட்டு போராடுகின்றனர். தமிழக அரசின் நடவடிக்கை என்ன' எனக் கேட்டுள்ளனர். 

அதற்கு அவர், ‘இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களில் விவசாயிகள் மதிக்கப்படுவதில்லை. விவசாயிகளை ஒவ்வொரு மாநில அரசும் எப்படி நடத்துகிறது என்று ஊடகங்கள்தான் எடுத்துச் சொல்ல வேண்டும். அதே நேரத்தில் தமிழகத்தில் வர்தா புயல், கஜா புயல் என்று எத்தனை புயல்கள் வந்தாலும் விவசாயிகளுக்குத் தேவையான நிதியுதவியை விரைந்து வழங்கி வருகிறது எடப்பாடியார் தலைமையிலா அம்மா அரசு. 

இன்னொன்று, டெல்லியில் விவசாயிகள் போராட்டம் செய்தது யாருக்கு எதிராக. மத்திய அரசிடம் அவர்கள் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதை எப்படி மாநில அரசுக்கு எதிராக பார்க்க முடியும். தலைக்கும் காலுக்கும் முடிச்சுப் போடக் கூடாது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியே அடிப்படையில் ஒரு விவசாயி. அவர் விவசாயியாக இருப்பதனால், அவர்களுடைய கஷ்டங்களைப் புரிந்து கொள்கிறார். அதனால்தான், விவசாயிகளுக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் உடனடியாக அமல்படுத்தி வருகிறார்' என்று பேசியுள்ளார். 

.