This Article is From Apr 27, 2019

குழந்தைகளை திருடி விற்று வந்த நாமக்கல் நர்ஸ் கைது -காவல்துறை அதிரடி

இந்நிலையில் காவல்துறை விசாரித்ததில் செவிலியர் அமுதா, அவரது கணவர், ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தைகளை திருடி விற்று வந்த நாமக்கல் நர்ஸ் கைது -காவல்துறை அதிரடி

தமிழ்நாடு சுகாதார செயலாளர் பீலா ராஜேஸ் கொடுத்த வழிகாட்டுதலின் படி இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. (Representational)

Namakkal, Tamil Nadu:

நாமக்கல் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு செவிலியர் குழந்தை விற்பனை குறித்து பேசிய ஆடியோ ஒன்று கடந்த நாட்களில் வெளியானது. குழந்தையை திருடி விற்கும் தொழிலை 30 ஆண்டுகளாக செய்து வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காவல்துறை விசாரித்ததில் செவிலியர் அமுதா, அவரது கணவர், ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆடியோ கிளிப் வைரலானதையடுத்து தமிழ்நாடு சுகாதார செயலாளர் பீலா ராஜேஸ் கொடுத்த வழிகாட்டுதலின் படி இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆடியோ க்ளிப்பில் அழகான பெண் குழந்தைக்கு ரூ.2.75 லட்சம் மற்றும் ஆண் குழந்தைக்கு ரூ.3 லட்சமும் விற்பனை செய்வதாக பேசுகிறது.

அழகான ஆண் குழந்தை வேண்டுமென்றால் அதற்கு ரூ.3.75 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறுகிறார்.

குழந்தை பிறப்புக்கான சான்றிதழ் வேண்டுமென்றால் கூடுதலாக ரூ. 70, 000 கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்

 குழந்தைகளை விற்கும் குற்றத்தில் இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியாக இந்தப் பெண்ணே உள்ளார். நர்ஸ் அமுதா விருப்ப ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

.