This Article is From Dec 13, 2018

தமிழ் சினிமா இப்பொழுதும் எப்பொழுதும் ரஜினிகாந்த் 'பேட்ட' தான்.

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய சினிமா வாழ்க்கையின் தொடக்கத்தில் வில்லனாகவும் சிறந்த நண்பன் கதாபாத்திரத்திலும் நடித்தவர்

தமிழ் சினிமா இப்பொழுதும் எப்பொழுதும் ரஜினிகாந்த்  'பேட்ட' தான்.

'பில்லா'ரசிகர் மன்ற தலைவராக இருந்த தேவராஜ்க்கு இன்று 60 வயது, காலா படத்தை ரசிக்கத் தொடங்கியுள்ள சத்யாவிற்கு வயது 3 இப்படி தன் காலத்தின் அனைவரையும் தன் ரசிகராக மாற்றும் திறமை பெற்றவர் நடிகர் ரஜினிகாந்த். இயக்குநர் கே. பாலச்சந்திரனால் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டு தன்னுடைய திறமையான நடிப்பால் தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தை தொட்டவர்.
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய சினிமா வாழ்க்கையின் தொடக்கத்தில் வில்லனாகவும் சிறந்த நண்பன் கதாபாத்திரத்திலும் நடித்தவர், பின்தான் கதாநாயகனாகவும் நடிக்கத் தொடங்கினார்.

hgk08ldg

கதாநாயகனாக வெற்றி பெறத் தொடங்கிய பின் தனக்கென பிரத்யேக அடையாளத்தை பெறுவதற்காக வணிக ரீதியான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்தார். தன்னுடைய காலத்தின் சக கலைஞனான கமலஹாசன் போல் தன்னால் விதவிதமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க முடியவில்லையே என்பது ரஜினிகாந்திற்கு ஏக்கம் எப்போதும் உண்டு. கெட்டவர்களையும் அநியாக்காரகளையும் வீழ்த்தி மக்களுக்கு நன்மை செய்யும் கதாநாயகனவே ரஜினிகாந்த் நடித்து வந்துள்ளார். இந்த விதமான கதாநாயகத் தன்மையை தேர்ந்தெடுப்பதில் மக்களின் எதிர்பார்ப்பு மட்டுமே காரணமாக ஒருபோதும் சொல்ல முடியாது.

காலத்திற்கேற்றார்போல் தன்னை தகவமைத்துக் கொள்வதில் ரஜினிக்கு எப்போதும் சிக்கல் உண்டு. உதாரணமாக வயோதிகம் என்ற தருணத்தை அமிதாப்பச்சன் மிகச்சரியாக கையாண்டிருப்பார். தனக்கான வயோதிகத்தை முற்றும் முழுதாக ஏற்றுக் கொண்டு அதற்கேற்ற கதாபாத்திரங்களில் நடித்து தன்னுடைய நடிப்புத் திறனையும் தான் நடிக்க விரும்பும் விதவிதமான கதாபாத்திரஙகளையும் ஏற்று சினிமா உலகில் தன்னை மேலும் நிலை நிறுத்திக் கொண்டார்.

 

5gbdm4e8

அமிதாப் பச்சனைப் போலான மாற்றத்தை மிகச்சரியாக எதிர்கொண்டவர் நடிகர் சத்தியராஜ். வயோதிகத்தை முழுவதுமாக ஏற்று அதற்கேற்ற கதாபாத்திரங்களையும் திரைக்கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வயோதிகத்திலும் தன்னுடைய நட்சத்திரப் பட்டத்திலிருந்து சற்றும் கீழிறிங்காமல் அதே கதாநாயகத்தன்மையில் கூடுதல் மசாலாவை கலந்து மட்டுமே ரசிகர்களுக்கு படைக்கிறார். ரஜினிகாந்த் தன்னுடைய படங்களில் விடாது பெண்களுக்கு பண்பாட்டை பாதுகாக்க ‘பஞ்ச்' டயலாக்குகளை பேசி தன்னுடைய ஆணாதிக்கத்தனத்திற்கு ஹீரோயிச சாயலை பூசி மொழுகிக் கொண்டு வந்திருக்கிறார்.
‘அதிகமா கோபப்படுற பொம்பளயும் அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை' எனப் பேசி கைத்தட்டல் மழையை பெற்றுக்கொண்டார். இந்த ஆணாதிக்கத்தன பாவத்தை நீக்கிக் கொள்ள அவருக்கு உதவும் இரண்டு படங்கள் காலாவும் கபாலியும் மட்டுமே.

இந்தப் படங்களில் வரும் ரஜினியை மட்டும் வைத்துக் கொண்டு ஆணாதிக்கத்தனமாக இவர் பேசிய பழைய படங்களையெல்லாம் நிச்சயமாக மன்னித்தருள முடியும்.

62igj43o

ரஜினிகாந்த் இன்றளவும் குழந்தைகள் முதல் இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் விரும்பும் மகாநடிகர் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எதனால் ரஜினியை பெரிதும் விரும்புகிறார்கள்..? அப்படி என்னதான் இருக்கிறது ரஜினியிடம் என்று அனைவரும் கேட்கும் கேள்விக்கு தர்க்கபூர்வ பதிலை யாராலும் ஒருபோதும் சொல்லமுடியாது. பதில் கண்டறிய முடியாத மாயம்தான் ரஜினிகாந்த்தின் அபார வெற்றி. இந்த மாயம் அனைத்து இடங்களிலும் கை கொடுக்கும் என்று இறுமாப்பு இருக்குமானால் அதை தளர்த்திக் கொள்வது தான் கலைஞன் ரஜினிகாந்த்திற்கு காலத்திற்கும் நல்லது. ஆனால் தமிழ் சினிமா உலகம் எப்போதும் இவர் பேட்ட தான்.
 

.