This Article is From Jul 06, 2018

பாப்ரி மசூதி- ராமர் கோவில் வழக்கு விசாரனை உச்ச நீதிமன்றத்தில் இன்று தொடர்கிறது

கடந்த 2010 ஆம் ஆண்டு, அலகாபாத் உயர் நீதிமன்றம் மூன்று நீதிபதிகள் அடங்கிய பென்ச் இந்த வழக்கில் தீர்பு அளித்தது

பாப்ரி மசூதி- ராமர் கோவில் வழக்கு விசாரனை உச்ச நீதிமன்றத்தில் இன்று தொடர்கிறது
New Delhi:

புதுதில்லி: பாப்ரி மசூதி, ராமர் கோவில் வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் தொடர உள்ளது.

தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, நீதிபதிகள் அஷோக் பூஷன், எஸ்ஏ நாசர் ஆகியோர் அடங்கிய சிறப்பு பென்ச், கடந்த மே 17 ஆம் தேதி இந்து குழுவின் மனுவை விசாரித்தனர். அதனை தொடர்ந்து இன்று மீண்டும் வழக்கு விசாரணை தொடர உள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு, அலகாபாத் உயர் நீதிமன்றம் மூன்று நீதிபதிகள் அடங்கிய பென்ச் இந்த வழக்கில் தீர்பு அளித்தது. முஸ்லீம் வக்ஃபு வாரியம், ராமர் கோவில் நிர்வாகம், நிர்மோகி அகரா அமைப்பு ஆகிய மூன்று அமைப்பினரும் சரிசமமாக நிலத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மூன்றில் இரண்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து 14 மேல் முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அயோத்திய வழக்கு தொடுத்த முக்கிய நபர்களுள் ஒருவரான சித்திக், கடந்த 1994 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவரது சட்ட வாரிசு, வழக்கை தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

.