தேசிய கல்வி கொள்கையின் இந்தி திணிப்புக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு

தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வை தடுப்பது, ஆகியவற்றுடன் மும்மொழிக் கொள்கையையும் பரிந்துரைத்தது. அதன்படி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது.

ஹைலைட்ஸ்

  • இந்தி திணிப்புக்கு எதிராக 1,00,000 ட்விட்கள் போடப்பட்டுள்ளன.
  • மும்மொழிக் கல்வி குழந்தைகளின் வாழ்வுக்கு எளிதானது
  • தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளர்ந்துள்ளன
Chennai:

மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கைக்கான வரைவு வெளியிடப்பட்டது. இதில் இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள நடைமுறையில் கல்வி கொள்கையானது1986 ஆண்டு கொண்டு வரப்பட்டு 1992 ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. 

தேசிய கல்வி கொள்கைகான வரைவில் தேசிய கல்வி ஆணையத்தை உருவாக்குவது, தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வை தடுப்பது, ஆகியவற்றுடன் மும்மொழிக் கொள்கையையும் பரிந்துரைத்தது. அதன்படி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்த பரிந்துரைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன. சமூக வலைதளங்களில் இந்தி திணிப்பை கடுமையாக சாடி வருகின்றனர்.  #StopHindiImposition மற்றும் #TNAgainstHindiImposition என்ற ஹேஸ்டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. கிட்டத்தட்ட 1லட்சம் ட்விட்கள் இந்த ஹேஸ் டேக்கின் கீழ் வந்துள்ளன.

கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் இவை வெறும் பரிந்துரைகள் மட்டுமே கொள்கையல்ல என்று கூறியுள்ளார். “இது கொள்கையல்ல, பொதுக் கருத்துகளை மக்களிடம் கேட்டு அறிந்த பின்னரே உருவாக்கப்படும். எந்தவொரு மொழியும் திணிக்கப்படவில்லை” என்று அவர் கூறினார்.

Newsbeep

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் “தமிழகம் இரண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிகளையே பின்பற்றுகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே தமிழகத்தில் அணிவகுத்து நிற்கும்” என்று கூறியுள்ளார்.

“பாஜகவை எச்சரிக்கிறேன். இந்தி திணிப்பு பெரும் போராட்டத்தை ஏற்படுத்தும்” என்று மதிமுக தலைவர் வைகோ கூறியிருந்தார்.

மநீம தலைவர் கமல்ஹாசன் “யார் மீதும் இந்தி திணிப்பை செய்யக்கூடாது” என்று கூறியுள்ளார்.