This Article is From Jan 27, 2020

'தமிழக அரசை குறை கூறும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை' - அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்!!

தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது தந்தவர்களை முதலில் கூட்டி வந்து அடிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

'தமிழக அரசை குறை கூறும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை' - அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்!!

டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தமிழக அரசை குறை கூறும் தகுதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது தந்தவர்களை முதலில் கூட்டி வந்து அடிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்துக் கூறி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது- 

ஊழலுக்காக உலகத்திலேயே கலைக்கப்பட்ட அரசாங்கம் என்று சொன்னால் அது திமுக தான். வேறு எந்த ஆட்சியை ஊழலுக்காக கலைத்தார்கள்?. ஊழலின் மொத்தம் உருவம் திமுக. அகில இந்திய அளவில் 2ஜி ஸ்பெக்ட்ரமில் 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்தவர்கள் திமுகவினர். அவர்கள் இமய மலையையே முழுங்கி விடுவார்கள். தமிழக அரசை குறை கூறும் தகுதி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இல்லை.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவின் மகன் திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் 'கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது முன் அனுமதி பெறாமலே அவரை சந்திக்கும் நபர்களில் விக்கிரமராஜாவும் ஒருவர்.

மணமகன், மணமகள் இருவரும் வீட்டில், மத்திய - மாநில அரசு போன்று அமைதியாக இருக்கக் கூடாது. கேள்வி கேட்க வேண்டும். குடியுரிமை சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு அளித்த ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தற்போது அதை எதிர்ப்பதாகவும், பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் நிதிஷ்குமாரே குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வருகிறார்.

சிஏஏ-வை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினால் நானே இவர்களை பாராட்டுவேன் தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதற்காக விருது பெற்றுள்ளதாக முதலமைச்சர் கூறி வருகிறார். முதலில் தமிழகத்துக்கு விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும்' என்று பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 
 

.