பாதுகாப்பு பணியில் இருக்கும் ஆயுதமேந்திய வீரர்கள் (File)
Colombo, Sri Lanka: ஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப் பின் இலங்கையில் கத்தோலிக்க சர்ச்சில் மே 5 முதல் ஞாயிற்றுக் கிழமை வழிபாடு கடும் பாதுகாப்புக்கிடையே நடக்கும் என்று தெரிவித்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன் ஈஸ்டர் தினத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 253 பேர் இறந்தனர். கார்டினல் மால்கம் ரஞ்சித் ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதல் குறித்த விசாரணைகளை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று தெரிவித்தார். மே 5 முதல் சர்ச்சில் வழிபாடு தொடங்கும் என்று ஏஎஃப்பியிடம் தெரிவித்தனர்.
முதலில் சிறிய அளவிலான மக்கள் கூட்டங்களை வழிபாட்டிற்கு அனுமதித்து பின் நிலைமை மாறுவதற்கு ஏற்றவகையில் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் உள்ள பேராயர் கார்டினர் “தனியார் அமைப்பு ஒன்று நினைவுக்கூட்டத்தை நடத்தியது. அதை தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பு செய்து வந்தது. வெடிகுண்டு சம்பவத்திற்கு பின்பு ஞாயிற்றுக் கிழமைகளில் சர்ச்சில் கூடத் தடை செய்யப்பட்டது.
கார்டினல் வசிக்கும் இடத்தில் ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
கார்டினல் தனக்கு வழங்கப்பட்ட புல்லட் ஃப்ரூவ் காரினை வேண்டாம் என்று கூறி அரசிடம் திரும்பக் கொடுத்து விட்டார். “எனக்கு புல்லட் ஃப்ரூவ் வாகனம் அவசியமில்லை, இறைவன் என்னை பாதுகாப்பார், ஆனால் என் மக்களுக்கும் நாட்டிற்கும் பாதுகாப்பு நிச்சயம் தேவை” என்று கூறினார்.