கொழும்புவை நோக்கி ட்ரக் லாரியில் வெடிகுண்டுகள் கொண்டு செல்லப்பட்டதா? - இலங்கையில் பதற்றம்!!

Sri Lanka Bombings: 320 பேரை பலி கொண்ட இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தால் இன்று தேசிய துக்க தினம் இலங்கையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கொழும்புவை நோக்கி ட்ரக் லாரியில் வெடிகுண்டுகள் கொண்டு செல்லப்பட்டதா? - இலங்கையில் பதற்றம்!!

உயிரிழந்தவர்களுக்காக பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.


Colombo: 

தலைநகர் கொழும்புவை நோக்கி ட்ரக் லாரி முழுவதும் வெடிகுண்டுகள் கொண்டு செல்லப்பட்டதாக பரவிய தகவலால் இலங்கையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

உளவுத்துறையினர் இந்த தகவலை அளித்ததாக கொழும்பு துறைமுகத்தின் இயக்குனர் இந்த எச்சரிகையை விடுத்துள்ளார். ஒரு கன்டெய்னர் ட்ரக் மற்றும் வேனில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்டு அந்த வாகனங்கள் கொழும்பு நோக்கி சென்றதாக உளவுத் துறை தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து கொழும்பு துறைமுகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டை தீவிரம் அடைந்துள்ளது. 

ஈஸ்டர் பண்டிகையான நேற்று முன்தினம் கொழும்புவில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 320-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அவர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் தொடர் குண்டுவெடிப்புகளுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. நியூசிலாந்தில் சில நாட்களுக்கு முன்பாக மசூதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு பதிலடியாக தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................