This Article is From Jun 21, 2018

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் சிறப்பு யோகா வகுப்பு!

உலக யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் சிறப்பு யோகா வகுப்பு!

ஹைலைட்ஸ்

  • ஜூன் 21-ம் தேதி உலக யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது
  • 2014-ம் ஆண்டு முதல் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது
  • உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று யோகா நிகழ்ச்சிகள் நடக்கும்
உலக யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் சிறப்பு யோகா வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

கடந்த 2014 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபை, ஜூன் 21 ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அங்கீகரித்தது. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும், இந்த நாளில் யோகாவின் மேண்மையைப் போற்றும் வகையில் பல்லாயிரம் பேர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று யோகா செய்து வருகின்றனர். மேலும், பல சிறப்பு யோகா வகுப்புகளும் இந்நாளில் நடத்தப்படுகின்றன.

இதையொட்டிதான், சென்னை மெட்ரோ ரயிலின் ஆலந்தூர், சைதாப்பேட்டை, வடபழனி, திருமங்கலம், எழும்பூர், டி.எம்.எஸ், அண்ணா நகர், ஷெனாய் நகர் ரயில் நிலையங்களில் சிறப்பு யோகா வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காலை 6 மணிக்கு ஒரு வகுப்பும், மாலை 6:30 மணிக்கு ஒரு வகுப்பும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகள், ஜூன் 21 முதல் 24 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சுதாவெளி சபையுடன் இணைந்து இந்த வகுப்புகளை பொது மக்களுக்கு நடத்த உள்ளன. 

இது மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மத்திய மற்றும் மாநில மக்கள் பிரதிநிகள் யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொது மக்களுடன் யோகா செய்தனர்.

புதுச்சேரியைப் பொறுத்தவரை, கடற்கரை சாலையில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி உள்ளிட்ட அரசு தரப்பினர் 3,000 பொது மக்களுடன் சேர்ந்து யோகா செய்தனர். கடற்கரை சாலையில் ஏறக்குறைய 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

 
.