காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் மாயம்! தீவிரவாதிகள் சதி செயலா என ராணுவம் தேடுதல்!!

மன்சூருக்கு சொந்தமான எரிந்த கார் குல்கம் மாவட்டத்தின் ரம்பாமா பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் மாயம்! தீவிரவாதிகள் சதி செயலா என ராணுவம் தேடுதல்!!

162 பட்டாலியன் படை பிரிவை சேர்ந்த ரைபிள்மேன் ஷாகிர் மன்சூர் நேற்று மாலை 5 மணி முதல் காணவில்லை.

New Delhi:

நாடு முழுவதும் சமீபத்தில் ஈத் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், தனது குடும்பத்தினருடன் ஈத் கொண்டாட ஜம்மு-காஷ்மீர் சென்ற ஒரு ராணுவ வீரர் நேற்று முதல் காணவில்லை என்று ராணுவம் தெரிவித்துள்ளது. 162 பட்டாலியன் படை பிரிவை சேர்ந்த ரைபிள்மேன் ஷாகிர் மன்சூர் நேற்று மாலை 5 மணி முதல் காணவில்லை என்றும் அவர் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

“162 பட்டாலியன் படை பிரிவை சேர்ந்த ரைபிள்மேன் ஷாகிர் மன்சூர் நேற்று மாலை 5 மணி முதல் காணவில்லை. அவரின் கார் எரிந்த நிலையில்  குல்கம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. தேடல் தொடர்கிறது.” என #TerrorismFreeKashmir என்ற ஹேஷ்டேக்கின் கீழ் ராணுவம் ட்வீட் செய்துள்ளது.

மன்சூருக்கு சொந்தமான எரிந்த கார் குல்கம் மாவட்டத்தின் ரம்பாமா பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.