சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி பாஜகவில் இணைந்தார்! 

சனிக்கிழமையன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இறந்த சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி, பாஜகவில் இணைந்தார்.

சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி பாஜகவில் இணைந்தார்! 

சந்தன கடத்தல் வீரப்பன் அக்டோபர் 18, 2004 அன்று கொல்லப்பட்டார். (கோப்பு)

Krishnagiri:

சனிக்கிழமையன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இறந்த சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி, பாஜகவில் இணைந்தார்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் முரளிதர் ராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

"ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் அவர்களின் சாதி, மத வேறுபாடின்றி நான் பணியாற்ற விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் மக்களுக்கானவை, அவற்றை மக்களிடம் கொண்டு செல்ல விரும்புகிறேன்" என்று வித்யா ராணி கூறினார்.

வித்யா ராணி தவிர, மற்ற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 1,000 உறுப்பினர்கள் பாஜகவில் இணைகின்றனர்.