This Article is From Oct 04, 2018

மலேசியாவில் 6 நீர் மூழ்கி நீச்சல் வீரர்கள் உயிரிழப்பு!

கோலாம்பூரில், மேற்கு பூஜாங் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற 17வயது இளைஞர் மாயம்.

மலேசியாவில் 6 நீர் மூழ்கி நீச்சல் வீரர்கள் உயிரிழப்பு!

30 நிமிடம் கழித்து கரைக்கு கொண்டு வரப்பட்டபோது, சுயநினைவின்றி இருந்த நீர் மூழ்கி நீச்சல் வீரர்கள்.

Kuala Lumpur:

மீன்பிடிக்கச் சென்ற 17வயது இளைஞனை காணவில்லை என தகவல் கொடுக்கப்பட்டதும், அந்த இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், 6 நீர் முழ்கி நீச்சல் வீரர்களை நீருக்குள் இறக்கி அந்த இளைஞரை தேட ஆரம்பித்தார்கள்.

அப்போது, ஏற்பட்ட சுழலில் 6 வீரர்களும் சிக்கினார்கள் என தீயணைப்பு துறையின் தலைவர் முகமது ஹமதன் வாஹித் கூறினார்.

மேலும், இதுகுறித்து போலீஸ் அதிகாரி அப்துல் ஆசிஸ் கூறும்போது, நீரோட்டத்தில் ஏற்பட்ட அழுத்தத்தால், 6 வீரர்களும் நீரில் மூழ்கினார்கள். 30 நிமிடம் கழித்து மீட்கப்பட்ட 6 வீரர்களும் சுயநினைவை இழந்திருந்தார்கள்.

ஒரே நாளில் 6 வீரர்களையும் இழந்தது பேரிழப்பு என்றார். மேலும், காணாமல் போன இளைஞர் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 

.