This Article is From Sep 28, 2019

“நீங்க நினைக்கிறதைவிட பெருசா…”- Pakistan-ஐ எச்சரிக்கும் ராணுவ அமைச்சர்!

Rajnath Singh Warns Pakistan - இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத்தும், பாலகோட் தீவிரவாத முகாம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது குறித்து உறுதிபட தகவல் தெரிவித்துள்ளார்

“நீங்க நினைக்கிறதைவிட பெருசா…”- Pakistan-ஐ எச்சரிக்கும் ராணுவ அமைச்சர்!

Rajnath Singh Warns Pakistan- பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ராணுவத்தையும் பாதுகாப்பு அமைப்புகளையும் உறுதியாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. 

Mumbai:

காஷ்மீர் (Kashmir) விவராகத்தார் இந்தியா - பாகிஸ்தான் (India - Pakistan) இடையில் தொடர்ந்து உரசல் போக்கு நீடித்து வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan), ஐ.நா கூட்டத்தில், “இரு அணு ஆயுத நாடுகள் போரிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும்” என்று எச்சரித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (Defence Minister Rajnath Singh), “இந்தியாவின் ராணுவ பலம் என்பது பாகிஸ்தானை விட மிக அதிகமானதாகும். எங்கள் அரசின் உறுதித் தன்மையால், தேவைப்பட்டால் பாகிஸ்தான் மீது பெரும் தாக்குதல் தொடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார். 

“ஐ.என்.எஸ் காந்தேரி (INS Khanderi) தற்போது இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் பாதுகாப்பு அம்சம் மேலும் அதிகரித்துள்ளது. எங்களின் பலம் குறித்து பாகிஸ்தான் அறிந்திருக்க வேண்டும். நாங்கள் தேவைப்பட்டால் காந்தேரியை பயன்படுத்துவோம்.

தீவிரவாதத்தை ஒரு நாடே ஊக்குவிப்பது என்பது மிகப் பெரிய சவாலாகும். அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க எங்களின் அரசு தயங்காது” என்று ராஜ்நாத் சிங் மேலும் தெரிவித்தார். 

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் பாலகோட்டில் இருக்கும் ‘ஜெய்ஷ்-இ-முகமது' தீவிரவாத அமைப்பின் முகாமை குண்டு போட்டுத் தாக்கியது இந்தியா. தற்போது அந்த முகாம் மீண்டும் செயல்படத் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கிறது இந்திய ராணுவத் தரப்பு. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. 

இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத்தும், பாலகோட் தீவிரவாத முகாம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது குறித்து உறுதிபட தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “எதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார். 

கடந்த சில மாதங்களாக இந்திய அளவில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத் துறை வட்டாரங்கள் தொடர்ந்து தகவல் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் உயிருக்கும் தீவிரவாதிகள் குறிவைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், பாதுகாப்பு அமைப்புகள் உஷார் நிலையில் இருந்து வருகின்றன.

இதனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ராணுவத்தையும் பாதுகாப்பு அமைப்புகளையும் உறுதியாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. 

அதன் ஒரு பகுதியாகவே, போர்களில் பயன்படுத்தக் கூடிய புதிய நீர் மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் காந்தேரியை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது மத்திய அரசு. வரும் அக்டோபர் மாதம் இந்திய விமானப் படையில் 36 ரஃபேல் விமான ஜெட்கள் சேர்க்கப்படும். 2021 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் எஸ்-400 ஆயுதங்கள் ராணுவப் பயன்பாட்டுக்கு வரும். 

With input from PTI

.