This Article is From Oct 28, 2018

அமெரிக்காவில் யூதர்களை குறிவைத்து துப்பாக்கிசூடு… 11 பேர் பலி!

துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட ராபர்ட் போவர்ஸ் என்னும் நபரை போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது

அமெரிக்காவில் யூதர்களை குறிவைத்து துப்பாக்கிசூடு… 11 பேர் பலி!

துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட ராபர்ட் போவர்ஸ் என்னும் நபரை போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது.

ஹைலைட்ஸ்

  • யூதர்களை குறிவைத்து இநதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
  • துப்பாகிசூட்டில் ஈடுபட்ட ராபர்ட் பிட்ஸ்பர்கைச் சேர்ந்தவர் தான்
  • ராபர்ட் இது வரை குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதில்லை எனப்படுகிறது
PITTSBURGH:

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் மாகாணத்தில் யூதர்களை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட ராபர்ட் போவர்ஸ் என்னும் நபரை போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது. அமெரிக்காவில் தொடர்ந்து அப்பாவி பொது மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் துப்பாக்கிசூடு சம்பவங்களால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை காலை 9:45 மணி அளவில், பிட்ஸ்பர்க்கில் யூதர்கள் ஒன்றாக கூடி வழிபாடு செய்யும் இடத்துக்கு 3 துப்பாகிகளுடன் வந்துள்ளார் ராபர்ட். உடனடியாக அவர், சரமாரியாக மக்கள் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டுள்ளார். சம்பவம் குறித்து உள்ளூர் காவல் துறையினருக்கு 9:54 மணிக்குத் தகவல் வந்துள்ளது. அங்கு விரைந்த காவல் துறையினர் ராபர்டைப் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர், போலீஸ் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் ராபர்டை பல இடங்களில் சுட்டு, செயலிழக்கச் செய்த போலீஸ், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது.

முதற்கட்ட விசாரணையில் ராபர்ட் போவர்ஸ், யூதர்களுக்கு எதிராக தனது முகநூலில் தொடர்ந்து கருத்திட்டு வந்தது தெரியவந்துள்ளது. அவரும் பிட்ஸ்பர்கைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்துள்ளது. துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தனது முகநூல் பதிவில் ராபர்ட், ‘என் மக்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நான் செயல்படப் போகிறேன்'என்று கூறியுள்ளார்.

இந்த கோர சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘வெறுப்பின் காரணமாக நமது நாட்டில் நடந்து வரும் குற்றங்கள் என்னை கவலையடைய செய்துள்ளது. இன்று நடந்த தாக்குதல் நம் எல்லோர் மீதும் நடந்த தாக்குதலாகவே பார்க்கப்பட வேண்டும். இது மனிதத்தின் மீது நடந்த தாக்குதல். இந்த வெறுப்புணர்வை அழிக்க வேண்டுமென்றால், நாம் எல்லோரும் கூட்டாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே முடியும்' என்றார்.

அவர் தொடர்ந்து, ‘யூதர்கள் கூடிய இடத்தில் துப்பாக்கி வைத்திருக்கும் பாதுகாவலர்கள் இருந்திருந்தால், இந்த கோர சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்' என்றும் கூறியுள்ளார்.

11 பொது மக்கள் இறந்த இச்சம்பவத்தில், 4 காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.