This Article is From Jun 16, 2018

'வேலை செய்யாமல் இருக்க ஒரு காரணம்..!'- கெஜ்ரிவாலை வறுத்தெடுத்த முன்னாள் முதல்வர்

புது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அம்மாநில ஆளுநர் அனில் பைஜல் இல்லத்தில் காலவரையற்ற தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்

'வேலை செய்யாமல் இருக்க ஒரு காரணம்..!'- கெஜ்ரிவாலை வறுத்தெடுத்த முன்னாள் முதல்வர்

ஷீலா திக்‌ஷித்

ஹைலைட்ஸ்

  • ஆளுநர் இல்லத்தில் கடந்த 5 நாட்களாக கெஜ்ரிவால் தர்ணா
  • அவருடன், ஆம் ஆத்மி கட்சியினரும் தர்ணாவில் இருக்கின்றனர்
  • கோரிக்கை நிறைவேறும் வரை தர்ணா, கெஜ்ரிவால்
New Delhi:

புது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அம்மாநில ஆளுநர் அனில் பைஜல் இல்லத்தில் காலவரையற்ற தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா திக்‌ஷித் கடுகடுத்துள்ளார்.

கெஜ்ரிவால், அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் 'ஸ்டிரைக்கில்' இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை மீண்டும் தங்கள் பணியை செய்ய வலியுறுத்துமாறு ஆளுநர் பைஜலிடம் சில நாட்களுக்கு முன்னர் வலியுறுத்தினார். இதற்கு அவர் சரிவர பதிலளிக்கவில்லை என்று கூறி கடந்த 5 நாட்களாக ஆளுநர் இல்லத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் கெஜ்ரிவாலும் அவரது சட்டமன்ற சகாக்களும். இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் டெல்லியின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான ஷீலா திக்‌ஷித்.

 
arvind kejriwal protest

ஷீலா திக்‌ஷித், 'முதலாவதாக கெஜ்ரிவாலும் ஆளுநரும் எதற்காக சண்டை போடுகின்றனர் என்பதே எனக்குப் புரியவில்லை. இந்தக் கருத்து மோதலின் நோக்கம் என்ன? கெஜ்ரிவால், இந்த தர்ணா மூலம் எந்த செய்தியை மக்களுக்குத் தர விரும்புகிறார். டெல்லி மக்கள் அவருக்குத் தனிப் பெரும்பான்மை கொடுத்து ஆட்சியில் அமர வைத்தனர். ஆனால், அவர் மக்களை எப்படி நடத்துகிறார் பாருங்கள். டெல்லி என்பது ஒரு யூனியன் டெரிட்டரி. இங்கு ஆளுநருக்கு இருக்கும் அதிகாரம் குறித்தும் முதல்வருக்கு இருக்கும் அதிகாரம் குறித்தும் தெளிவாக சட்ட சாசனத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது. அதை உடனடியாக மாற்றுவதெல்லாம் சாத்தியம் இல்லாத விஷயம். டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து கொடுப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அப்படி மாநில அந்தஸ்து கொடுப்பதென்றால் அரசியல் சட்ட சாசனத்தையே திருத்த வேண்டும். இதை எங்கள் ஆட்சி காலத்தில் புரிந்து கொண்டோம். எனவே தான் அதை அரசியலாக மாற்றவில்லை. இதை கெஜ்ரிவாலும் புரிந்து கொள்ள வேண்டும். ஆளுநரும் அவரும் பல கருத்துகளில் முரண்பட முழு உரிமை உள்ளது. அதை பேசித்தான் தீர்க்க வேண்டுமே தவிர, இப்படி தர்ணா போராட்டத்தில் ஈடுபடக் கூடாது' என்று இந்த விவகாரம் குறித்து கருத்து கூறியுள்ளார். 

.