தமிழக ஜவுளிக்கடையில் சானிடைசர் வழங்கும் புடவை கட்டிய 'பெண்' ரோபோ; வைரல் வீடியோ!

A viral video shows a robot, draped in a saree, walkஜவுளிக்கடையில் ரோபோக்களைக் கொண்டு வந்ததற்கு நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ing around a showroom.

தமிழக ஜவுளிக்கடையில் சானிடைசர் வழங்கும் புடவை கட்டிய 'பெண்' ரோபோ; வைரல் வீடியோ!

ஜவுளிக்கடையில் ரோபோக்களைக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் விநியோகிக்கப்படுகிறது

ஹைலைட்ஸ்

  • வாடிக்கையாளருக்கு சானிடைசர் வழங்கும் ரோபோ
  • கொரோனா விழிப்புணர்வும் ஏற்படுத்துகிறது
  • பொம்மை ரோபோவைப் பார்ப்பதற்காகவே கடையில் கூட்டம் கூடுகிறது

கொரோனா நோய்த்தொற்றுப் பரவலுக்கு மத்தியல் தனிமனித இடைவெளியை உறுதி செய்யும் வகையில் பல்வேறு இயந்திர பயன்பாடுகள் வந்த வண்ணம் உள்ளன. அண்மையில் சிங்கப்பூரில் ரோபோ நாய் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் ஜவுளிக்கடை ஒன்றில் சேலை அணிந்த பெண் ரோபோ வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் வழங்கும் சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை சுதா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ரோரேபா ஒன்றுக்கு சேலை அணிந்துள்ளனர். அந்த ரோபோவில் செயற்கை நுண்ணறிவு, தொலைவு உணர் திறன் உள்ளிட்ட அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன. இதனால் ஜவுளிக்கடையில் அப்படியே அங்குமிங்குமாய் வலம் வருகிறது. வாடிக்கையாளர்கள் அருகில் சென்றதும் நின்று விடுகிறது. 
 

ரோபோவின் கையில் சானிடைசர் இணைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் கையை நீட்டினால், உடனே சானிடைசர் வழங்கி விடுகிறது. பின்னர், அங்கிருந்து நகர்ந்து சென்று மற்ற வாடிக்கையாளர்களை நோக்கிச் செல்கிறது. 
 

இந்த வீடியோ 44 நொடிகள் ஓடிக்கொண்டிருக்கிறது. டுவிட்டரில் மட்டும் சுமார் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. 


கொரோனா பரவி வரும் சூழலில், தனி மனித இடைவெளி, முகக்கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களுடன் விழிப்புடன் இருக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  அதை மீண்டும் வலியுறுத்தும் வகையில் ஜவுளிக்கடையில் ரோபோக்களைக் கொண்டு வந்ததற்கு நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

Click for more trending news