This Article is From Dec 18, 2018

சபரிமலையில் போலீஸ் பாதுகாப்புடன் தரிசனம் மேற்கொண்ட 4 திருநங்கைகள்!

அனன்யா, திருப்தி, ரெஞ்சுமோள், அவந்திகா ஆகிய 4 திருநங்கைகள் கருப்புச் சேலை அணிந்து தலையில் இருமுடி கட்டு வந்தவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

சபரிமலையில் போலீஸ் பாதுகாப்புடன் தரிசனம் மேற்கொண்ட 4 திருநங்கைகள்!

முன்னதாக தரிசனம் செய்ய வந்த திருநங்கை பக்தர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

Sabarimala:

சபரிமலைக்கு தரிசனம் மேற்கொள்ள வந்த 4 திருநங்கைகளை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் திருப்பி அனுப்பினர். இந்நிலையில் நேற்று அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் தரிசனம் மேற்கொண்டனர்.

முன்னதாக தடுத்த நிறுத்தப்பட்ட திருநங்கைகள் 4 பேரும் கேரள போலீஸ் ஐ.ஜி. மனோஜ் ஆபிரகாமை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் தங்களை சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். இதைத்தொடர்ந்து அந்த திருநங்கைகள் 4 பேரும் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய போலீசார் அனுமதி வழங்கினர்.

இதைத்தொடர்ந்து நேற்று திருநங்கைகள் 4 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை கோவிலுக்கு சென்றனர். கருப்பு சேலை அணிந்து, தலையில் இருமுடி கட்டுடன் சென்ற அவர்கள் 18-ம் படி வழியாகச் சென்று சாமி தரிசனம் செய்தனர். நெய் அபிஷேகமும் செய்தனர்.

இதுபற்றி திருநங்கைகள் கூறுகையில் திருநங்கைகளாக பிறந்த எங்களுக்கு இன்று சபரிமலையில் தரிசனம் செய்ததன் மூலம் விமோசனம் கிடைத்துள்ளது. எங்களுக்கு இன்று சிறப்பான தரிசனம் கிடைத்தது என்றனர்.

.