மதம் பிடித்த யானை 'ஒசாமா பின்லேடன்' திடீர் மரணம்!! பொதுமக்கள் அதிர்ச்சி!

மதம் பிடித்திருந்த யானை ஒசாமா பின்லேடன் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, நகருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. நூற்றுக்கணக்கான வனத்துறையினர் போராடி அதனை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மதம் பிடித்த யானை 'ஒசாமா பின்லேடன்' திடீர் மரணம்!! பொதுமக்கள் அதிர்ச்சி!

ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியுடன் யானை தூக்கப்படும் காட்சி.

Guwahati:

மதம்பிடித்து ஓடி அசாம் மாநிலத்தில் துவம்சம் செய்த யானை பின்லேடன் திடீரென உயிரிழந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். 

அசாம் மாநிலம் கோல்பரா மாவட்டத்தில் உள்ள ரோங்ஜலி வனப்பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஒன்று 2 வாரத்திற்கு முன்பாக ஊருக்குள் புகுந்தது. குடிசைகளை அழித்து, மக்களை அச்சுறுத்தியதை தொடர்ந்து அதனை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. 

மதம் பிடித்த யானைக்கு மக்கள் 'ஒசாமா பின் லேடன்' என்று பெயர் சூட்டியிருந்தனர். இதையடுத்து பின்லேடனை பிடிக்க நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

கும்கி யானைகளின் உதவியோடு ஒசாமா கடந்த 11-ம்தேதி பிடிக்கப்பட்டான். பின்னர் அதனை ஓரங் தேசிய உயிரியல் பூங்காவுக்கு கடந்த 12-ம் தேதி வனத்துறையினர் மாற்றினர். 

ஒசாமா அமைதிக்கு திரும்பியதை தொடர்ந்து அசாம் மக்கள் அதனை கிருஷ்ணா என்று அன்போடு அழைத்தனர். யானையை காட்டுக்குள் விடலாம் என வனத்துறையினர் கருதிய நிலையில் அதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மீண்டும் யானை ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்யலாம் என்ற அச்சத்தில் மக்கள் இருந்தனர். இதனால், யானை தொடர்ந்து உயிரியல் பூங்காவில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் இன்று காலை 5.30-க்கு யானை ஒசாமா உயிரிழந்தது. இதனையறிந்த அசாம் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். யானையை உடற்கூறு ஆய்வு செய்யும் நடவடிக்கையில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)