This Article is From May 14, 2019

இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த இரும்பு மங்கை ஐரோம் ஷர்மிளா!

ஐரோம் ஷர்மிளா மனிப்பூரின் இரும்பு மங்கை என்று அழைக்கப்படுகிறார். அந்த மாநிலத்தில் நடைமுறையில் இருந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத் எதிர்த்து தொடர் உண்ணா விரதத்தில் இருந்தார்.

இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த இரும்பு மங்கை ஐரோம் ஷர்மிளா!

இரட்டை பெண் குழந்தைகளுடன் ஐரோம் ஷர்மிளா

New Delhi/ Bengaluru:

உலகம் அன்னையர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்த அதே வேளையில், சமூக ஆர்வலரும் மனித உரிமை போராளியுமான ஐரோம் ஷர்மிளா, பெங்களூரு மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தைகளுக்கு தாயானார். 

மணிப்பூர் மாநிலத்தின் இரும்பு மங்கை என்று அழைக்கப்படுபவர் 44 வயதாகும் ஐரோம் ஷர்மிளா. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இது பாதுகாப்பு படையினருக்கு வானளாவிய அதிகாரத்தை அளிக்கிறது. 
 

0g6vn4b4


இளம் வயதில் இந்த சட்டத்தால் பாதிக்கப்பபட்ட ஐரோம் ஷர்மிளா அதனை நீக்க வலியுறுத்தி கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து உண்ணா விரதம் இருந்து வந்தார். கடந்த 2016 ஆகஸ்ட் 9-ம்தேதி அவர் தனது உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார். 

c6rf5c7s


2017-ல் நடந்த மணிப்பூர் சட்டசபை தேர்தலில் பங்கேற்ற ஐரோம் ஷர்மிளா 90 வாக்குகளை மட்டுமே பெற்றார். அந்த தேர்தலில் மொத்தம் 27,271 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதனால் விரக்தி அடைந்த ஷர்மிளா அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்கியதுடன் பிரிட்டிஷ் குடிமகன் டெஸ்மாண்ட் கவுடின்ஹோ என்பவரை கடந்த 2017-ல் திருமணம் முடித்துக் கொண்டார். 

கர்ப்பமுற்றிருந்த ஷர்மிளா பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த ஞாயிறன்று அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 
 

.