This Article is From Apr 08, 2019

யானை கொன்றது… சிங்கம் உண்டது… தென்னாப்பிரிக்காவில் வேட்டைக்காரனுக்கு நேர்ந்த கதி!

ஒருவரை யானை அடித்துக் கொன்றுள்ளது. அவரது உடம்பை மற்ற நால்வரும் தூக்கி வர முயற்சித்தாலும் சிங்கங்கள் சூழ்ந்த நிலையில் இறந்தவரின் உடலை போட்டு விட்டு தப்பியோடியுள்ளனர்.

யானை கொன்றது… சிங்கம் உண்டது… தென்னாப்பிரிக்காவில் வேட்டைக்காரனுக்கு நேர்ந்த கதி!

சுமார் பத்தாண்டுகளில் 8,000க்கும் அதிகமானவை கொல்லப்பட்டுள்ளன

தென்னாப்பிரிக்க கண்டத்தில் அதிகளவில் காண்டா மிருகங்கள் உள்ளன. ஆப்பிரிக்காவில் சுமார் 20, 000 முதல் 25, 000 வரை காண்டா மிருகங்கள் உள்ளன. உலகில் 80சதவீத காண்ட மிருகங்கள் தென்னாப்பிரிக்காவில் தான் உள்ளன. 

சமீப ஆண்டுகளாக இதனை வேட்டையாடும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சுமார் பத்தாண்டுகளில் 8,000க்கும் அதிகமானவை கொல்லப்பட்டுள்ளன. 2013 மற்றும் 2017 க்கு ஆண்டுகளுக்குள் 1000க்கும் அதிகமானவை கொல்லப்பட்டன. விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில்  2018 ல் இதன் எண்ணிக்கை 769 ஆக குறைந்தது.  

காண்டா மிருகம் அதன் தந்தத்திற்காக வேட்டையாடப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் குரூகர் தேசிய பூங்காவில் ஐந்து வேட்டைக்காரர்கள் சட்டவிரோதமாக நுழைந்த நிலையில் அதில் 4 பேர் மட்டுமே உயிருடன் திரும்பியுள்ளனர்.

 ஒருவரை  யானை அடித்துக் கொன்றுள்ளது. அவரது உடம்பை மற்ற நால்வரும் தூக்கி வர முயற்சித்தாலும் சிங்கங்கள் சூழ்ந்த நிலையில் இறந்தவரின் உடலை போட்டு விட்டு தப்பியோடியுள்ளனர். சிங்கங்கள் அவரது உடலை தின்று தீர்த்தன.

பூங்கா அதிகாரிகள், சட்டவிரோதமாக உள்நுழைந்தவர்கள் கையில் 375 வேட்டைத் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. வேட்டைக்காரர்கள் விசாரிக்கப்பட்டு விரைவில் நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப்படுவார்கள் என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பூங்கா அதிகாரிகள், அனுமதியின்றியோ அல்லது சட்டவிரோதமாக காட்டிற்குள் நுழைவதை வன்மையாக கண்டித்துள்ளனர். இறந்தவரின் உடலை தேடித்தருவதாக குடும்பத்தினரிடம் கூறியிருந்த நிலையில், தேடுதல் குழுவொன்று வேட்டைக்காரரின் உடலைத் தேடியபோது இறந்தவரின் மண்டையோடும் பேண்ட் மட்டுமே கிடைத்துள்ளது என்று  பூங்கா அதிகாரிகள் அறிக்கை தெரிவித்துள்ளது



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.