This Article is From Aug 14, 2020

அலுவலகத்தில் வேலை பார்க்கும் கிளி: வைரல் வீடியோ

Reggie the cockatoo generously volunteers his time at Cincinnati Zoo's office.

அலுவலகத்தில் வேலை பார்க்கும் கிளி: வைரல் வீடியோ

Reggie the cockatoo is a gainfully employed member of society.

அமெரிக்காவில் மஞ்சள் நிறக் கிளி ஒன்று அலுவலகத்தில் ஊழியர்களோடு ஊழியராக வேலை செய்து அசத்தி வருகிறது.

பொதுவாக கிளிகள் மனிதர்களோடு நெருங்கிப் பழகும் தன்மை கொண்டது. மனிதர்கள் செய்யும் செயல்களை அப்படியே பார்த்து, அவைகளும் செய்ய முயற்சிக்கும். கிளிகளின் குறும்பு வீடியோக்களை சமூகவலைதளங்களில் பார்த்திருப்போம்.

அந்த வகையில், அமெரிக்காவில் மஞ்சள் கொண்டை கிளி ஒன்று அலுவலகத்தில் செய்யும் சேட்டைகள் அனைவரையும் ஈர்த்துள்ளது. அமெரிக்காவில் சின்சினாட்டி பூங்கா அமைப்பு தனது சமூகவலைதள பக்கங்களில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. 

அதில் அலுவலக ஊழியர்கள், பணி நிமித்தமாக பிரிண்டரில் பிரிண்ட் கொடுத்துள்ளனர். இந்தக் கிளியோ பிரிண்டரில் இருந்து வரும் ஒவ்வொரு பேப்பரையும் தனது அலகால் கவ்வி  வெளியே எடுத்து போடுகிறது. 

இந்த வீடியோ பலரையும் ஈர்த்துள்ளது.  அங்குள்ள ஊழியர்களோடு நெருங்கி பழகுவதாகவும், ஊழியர்களும் இந்தக் கிளயை செல்லமாக வளர்த்து வருவதாகவும் தெரிவிக்கி்ன்றனர். தினமும் அலுவலக ஊழியர்கள் கொண்டு வரும் உணவுகளை விரும்பி சாப்பிடுமாம். சுருக்கமாக சொல்லப்போனால் அலுவலக உதவியாளராக மஞ்சள் கொண்டை கிளி செயல்படுவதாக கூறுகின்றனர்.

 

மஞ்சள் கொண்டை கிளியின் அட்டாச வீடியோவைப் பாருங்கள்:

Click for more trending news


.