This Article is From Feb 10, 2019

லண்டன் உயிரியல் பூங்காவில் சோகம்! - அறிய வகை புலி பரிதாபமாக உயிரிழப்பு!

ஐரோப்பிய அளவிலான இனப்பெருக்க திட்டத்திற்காக அசிம் என்ற புலி லண்டன் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் அது வரும் காலங்களில் இனவிருத்தி பெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது

லண்டன் உயிரியல் பூங்காவில் சோகம்! - அறிய வகை புலி பரிதாபமாக உயிரிழப்பு!

லண்டன் உயிரியல் பூங்காவில் ஆண் புலி, சுமத்ரன் புலியை கொன்றது.

London:

லண்டன் உயிரியல் பூங்காவில் அறிய வகை சுமத்ரன் ரகத்தை சேர்ந்த புலி முதல்முறையாக இனவிருத்திக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இதற்கான முதல் முயற்சியே பெரும் சோகத்தில் முடிந்ததது.

மெலாட்டி (அறியவகை சுமத்ரன் வகை பெண் புலி) அசிம் என்ற ஆண் புலியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் இரு புலிகளும் சுமூகமாக சென்ற நிலையில், திடீரென ஆக்ரோஷமாக மாறி சண்டையிட ஆரம்பித்தது.

இதைப்பார்த்த, அதிகாரிகள் உடனடியாக பலத்த சத்தங்களை எழுப்பியும், நெருப்புகளை காட்டியும் புலிகளின் கவனத்தை திசைதிருப்ப பார்த்தனர். ஆனால், அவை எதுவும் பலனளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் கடும் கோபம் கொண்ட அசிம் புலி, மெலாட்டி புலியை சாக அடித்தது.

இதைத்தொடர்ந்து உயிரியில் பூங்கா வெளியிட்ட அறிக்கையில், லண்டன் zsl உயிரியல் பூங்காவில் உள்ள அனைவரும் மெலாட்டியின் இழப்பை அறிந்து இடிந்துபோனோம் என மிகுந்த மனவருத்தத்துடன் தெரிவித்திருந்தனர்.

ஐரோப்பிய அளவிலான இனப்பெருக்க திட்டத்திற்காக அசிம் என்ற புலி லண்டன் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் அது வரும் காலங்களில் இனவிருத்தி பெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. பூங்காவானது அசிம் புலியை 7 நாட்கள் முன்னதாக கொண்டு வந்து எதிரெதிரே வைத்திருந்தது.

அவை ஒரே கூண்டில் அடைக்கப்படுவதற்கான நேரம் அறிய, இரண்டு புலிகளும் உண்ணிப்பாக கவனிக்கப்பட்டு வந்தது. பின்னர் உரிய நேரத்தில் இரண்டும் ஒரே கூண்டில் அடைக்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக அசிம் மெலாட்டியை தாக்கி விட்டது. அசிமும் மெலாட்டியும் குட்டிகளை ஈன்றெடுக்கும் என்று நினைத்த பூங்கா அதிகாரிகளுக்கு பெரும் சோகமே மிஞ்சியது.

இதனால், அறிய வகை சுமத்தரன் ரகத்தை சேர்ந்த மெலாட்டி பெண் புலி பரிதாபமாக பலியானது.

.