This Article is From Feb 21, 2019

கூட்டணி சக்சஸ்… தமிழக அரசின் திட்டத்துக்கு ஆதரவாக ராமதாஸ் அறிக்கை!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம் பெறுவது அதிகாரபூர்வமாக உறுதியாகியுள்ளது.

கூட்டணி சக்சஸ்… தமிழக அரசின் திட்டத்துக்கு ஆதரவாக ராமதாஸ் அறிக்கை!

அதிமுக கூட்டணியில், பாமக-வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஹைலைட்ஸ்

  • நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக
  • பாமக-வுக்கு கூட்டணியில் 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • பாஜக-வுக்கு கூட்டணியில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம் பெறுவது அதிகாரபூர்வமாக உறுதியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில், பாமக-வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அதிமுக தலைமையிலான தமிழக அரசை தினம் தினம் விமர்சித்து வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று அரசுக்கு ஆதரவாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மீனவத் தொழிலாளர்கள்,  விவசாய தொழிலாளர்கள், ஏழைத் தொழிலாளர்கள், பட்டாசுத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும். இதற்காக முதல்கட்டமாக ரூ. 1,200 கோடி ஒதுக்கப்படும். இந்த சிறப்பு நிதியால் 60 லட்சம் குடும்பங்கள் பலன் அடையும்' என்ற அறிவிப்பை வெளியிட்டார். 

இந்த அறிவிப்பை ராமதாஸ் வரவேற்று, ‘அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது' என்று கூறியுள்ளதாக ஒரு செய்தி பரவியது. இந்நிலையில் இதை மெய்பிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார் ராமதாஸ்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் வறுமையில் வாடும் அமைப்புசாரா தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.2000 நிதி வழங்கும் திட்டத்திற்கும், மத்திய அரசின் சார்பில் உழவர்களுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா ரூ.2000 வழங்கும் திட்டத்திற்கும் பயனாளிகளை பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இந்தத் திட்டங்களின்படி நிதியுதவி வழங்கும் பணி வரும் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட உள்ளது. அதற்குள்ளாக வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களும், உழவர்களும் 100% இத்திங்களுக்கு விண்ணப்பித்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். வறுமையை ஒழிப்பதற்கான இத்திட்டங்களின் பயன்களை தகுதியானவர்களுக்கு பெற்றுத் தருவதில் அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களுடனும் ஒருங்கிணைந்து பாமக நிர்வாகிகள் செயல்பட வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

.