This Article is From Nov 29, 2019

'அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் அமைதி, சகோதரத்துவத்தை ஏற்படுத்தும்' : ரவிசங்கர்!!

நாட்டின் மிக முக்கிய வழக்குகளில் ஒன்றான அயோத்தி கோயில் விவகாரத்தில் கடந்த 9-ம்தேதி உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. இதன்படி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

'அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் அமைதி, சகோதரத்துவத்தை ஏற்படுத்தும்' : ரவிசங்கர்!!
Nagpur:

அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோயில் மக்கள் மத்தியில் அமைதி, சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் என்று ஆன்மிகவாதியும், உச்ச நீதிமன்றம் அமைத்த சமாதானக்குழுவின் உறுப்பினருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார். 

நாட்டின் மிக முக்கிய வழக்குகளில் ஒன்றான அயோத்தி கோயில் விவகாரத்தில் கடந்த 9-ம்தேதி உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. இதன்படி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலாக முஸ்லிம் தரப்பினருக்கு 5 ஏக்கரில் மாற்று இடம் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஆன்மிகவாதியும், அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அமைத்த சமாதானக்குழுவில் இடம்பெற்றவருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அயோத்தி ராமர் கோயில் விவகாரம் குறித்து அவர் கூறியதாவது-

அயோத்தில் கட்டப்படவுள்ள ராமர் கோயில் இந்து - முஸ்லிம் மக்களிடையே அமைதி, சகோதாரத்துவத்தை ஏற்படுத்தும். நாட்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பும், மிக நீண்டகால கனவுமான அயோத்தி  ராமர் கோயில் கட்டி எழுப்பப்பட உள்ளது. 

கோயிலை கட்டுவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெகு விரைவில் கோயிலை கட்டும் பணிகள் தொடங்கும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

.