ம.பி., சத்தீஸ்கரை தொடர்ந்து ராஜஸ்தானிலும் விவசாய கடனை தள்ளுபடி செய்தது காங்கிரஸ்

Rahul Gandhi: மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி புதிதாக ஆட்சியை அமைத்துள்ளது.

ம.பி., சத்தீஸ்கரை தொடர்ந்து ராஜஸ்தானிலும் விவசாய கடனை தள்ளுபடி செய்தது காங்கிரஸ்

Farm Loan Waiver: ராஜஸ்தானில் பாஜக அரசு இருந்த நிலையில் அதனை காங்கிரஸ் கட்சி அப்புறப்படுத்தியுள்ளது.

Jaipur:

Farm Loan Waiver: மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சி விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை அமைத்திருக்கிறது. இவற்றில் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் விவசாயிகள் பெற்ற கடனை அக்கட்சி ரத்து செய்துள்ளது.

இந்த நிலையில் இன்று 3-வது மாநிலமான ராஜஸ்தானிலும் விவசாயிகள் கடனை ரத்து செய்து காங்கிரஸ் அரசு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதன்படி சுமார் 2 லட்சம் வரை பெற்ற விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த நடவடிக்கையால் அரசுக்கு ரூ. 18 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsbeep

விவசாயிகள் கடனை மத்திய அரசு முழுவதுமாக ரத்து (Loan Waiver For Farmers) செய்யாத வரையில் பிரதமர் மோடியை தூங்க விட மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்திருந்தார். இதனால் விவசாயிகள் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், 3 மாநிலங்களில் விவசாயிகளின் கடனை ரத்து செய்து காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.