This Article is From Aug 05, 2019

மும்பையில் கனமழை : பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

கடுமையான மழை காரணமாக ராய்காட், தானே மற்றும் பால்கர் மாவட்டங்களையும் உள்ளடக்கிய பகுதிகளில் வசிப்பவர்கள், முக்கிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

மும்பையில் கனமழை : பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

நாசிக் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அதிகாரிகள் ஏற்கனவே விடுமுறை அறிவித்துள்ளனர்

Mumbai:

மும்பையில் அடுத்த 48 மணிநேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிர அரசு ஞாயிறு அன்று பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறையை அறிவித்தது. தானே, பால்கர் மற்றும் ராய்கட் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. நாசிக் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அதிகாரிகள் ஏற்கனவே விடுமுறை அறிவித்துள்ளனர்

மும்பையில் உள்ள அனைத்து அரசு மற்றும் பிற ஊழியர்கள் திங்கள் கிழமை தாமதமாக வர அனுமதிக்கப்படுவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

கடுமையான மழை காரணமாக ராய்காட், தானே மற்றும் பால்கர் மாவட்டங்களையும் உள்ளடக்கிய பகுதிகளில் வசிப்பவர்கள், முக்கிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவு முதல் மும்பை, தானே, பால்கர் மற்றும் நவி மும்பையில்  தொடர்ச்சியான மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

கடந்த 24 மணிநேரத்தில் மும்பையில் 100மி.மீ மழை பெய்தது. புறநகர்பகுதிகள் தானே மற்றும் நவி மும்பை 250 மி.மீக்கும் அதிகமான மழை பெய்தது. 

நாசிக் மற்றும் புனே மாவட்டங்களில் ஆறுகள் நிறைந்து வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.