This Article is From Nov 14, 2018

75 ரயில் நிலையங்களில் 100 அடி உயர தேசிய கொடி நிறுவ முடிவு!

75 ரயில் நிலையங்களில் 100 அடி உயர தேசிய கொடியை நிறுவுமாறு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

75 ரயில் நிலையங்களில் 100 அடி உயர தேசிய கொடி நிறுவ முடிவு!

டிசம்பர் மாத இறுதிக்குள் தேசிய கொடிகள் நிறுவும் பணியை நிறைவு செய்யுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Mumbai:

இந்திய ரயில்வே நிர்வாகம், முக்கியமான 75 ரயில் நிலைய வளாகத்தில் 100 அடி உயர தேசிய கொடியை டிசம்பர் மாத இறுதிக்குள் நிறுவ முடிவு செய்துள்ளது.

அக்.22 ஆம் தேதி ரயில்வே நிர்வாகம் இது தொடர்பான அறிக்கையை மண்டல ரயில் நிலையங்களுக்கு அனுப்பியது. சம்பந்தப்பட்ட ரயில் நிலைய அதிகாரிகள் டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த பணியை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த உத்தரவினை ரயில்வே நிர்வாக இயக்குனர் விவேக் சக்சேனா வெளியிட்டுள்ளார். இந்த நிர்வாகம், நினைவுச் சின்ன கொடியை ஏ1 தர ரயில் நிலையங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இப்பணி டிசம்பர் 2018க்குள் முடிவடைய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தேசிய கொடியை பொருத்தமான இடத்தில் நிறுவ வேண்டும். விளக்குகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். தேசிய கொடியின் பாதுகாப்பினை உறுதி செய்வது ரயில்வே பாதுகாப்பு படையினரின் பணி என்று குறிப்பிட்டுள்ளார்.

.