கிழக்கு ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்புகள்!

தேர்வில் பங்குபெற விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜனவரி 10

கிழக்கு ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்புகள்!
New Delhi:

கிழக்கு மத்திய இரயில்வே துறையில் 2234 காலி இடங்கள் உள்ள நிலையில், வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், வேலைக்கான பயிற்சி வகுப்பும் நடக்கவுள்ளது. ஃபிட்டர், தட்டச்சர், பெய்ண்டர், வெல்டர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளதால் இந்த தேர்வை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்போ அல்லது ஐ.டி.ஐ. தகுதியோ பெற்றிருக்க வேண்டும். போட்டி தேர்வில் பெறப்பட்ட பொதுவான மதிபெண்களின் அடிப்படையில் பயிற்சிக்கான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் இத்தேர்வில் பங்குபெற விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜனவரி 10 ஆகும்.

தேர்வில் பங்கேற்பவர்கள் 11.12.2018 அன்று,15 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்றும் 24 வயதை நிறைவு செய்திருக்க கூடாது என்பது கட்டாயம்.

தேசிய பயிற்சி சான்றிதழையோ, தேசிய தொழிற்துறை சான்றிதழையோ விண்ணப்பதாரர்கள் பெற்று இருத்தல் வேண்டும். தொழில்சார் பயிற்சியோ, மாநில பயிற்சி கழகத்தில் படித்த தேசிய கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட தொழில் பயிற்சி சான்றிதலை வைத்து பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ. 100 வசூலிக்கப்படுகிறது. விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என கிழக்கு ரயில்வே நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டது.