This Article is From Oct 06, 2018

ரயில்வே ஓட்டல் முறைகேடு தொடர்பான வழக்கில் லாலு யாதவின் மகன் மற்றும் மகனுக்கு ஜாமீன்

சிறப்பு நீதிமன்ற நீதிபதி அருண் பரத்வாஜ், நவம்பர் 19-ம் தேதிவரைக்கும் இடைக்கால ஜாமீனை வழங்கி உத்தரவிட்டுள்ளார்

மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருடன் லாலு பிரசாத் யாதவ்

New Delhi:

சிபிஐ-யால் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரெயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) முறைகேடு வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி அருண் பரத்வாஜ், வரும் நவம்பர் 19-ம்தேதி வரை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது பண மோசடி செய்து தொடர்பான வழக்கு அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் நவம்பர் 19-ம்தேதி வீடியோ கான்பரன்சிங் மூலமாக லாலு பிரசாத்தை ஆஜர் படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஐ.ஆர்.சி.டி.சி. முறைகேடு தொடர்பான வழக்கில் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி லாலுவவை தவிர்த்து மற்றவர்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

மத்திய ரயில்வேத்துறை அமைச்சராக இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய முறைகேட்டில் ஈடுபட்டார் என்பதும், ஐ.ஆர்.சி.டி. ஓட்டல்களை தனியார் நிறுவனத்திற்கு கான்ட்ராக்ட் விட்டதில் முறைகேடு நடந்துள்ளது என்பதும் புகாராக உள்ளது.

இதில் கைது செய்யப்பட்ட லாலு பிரசாத் யாதவ் ஜார்க்கண்ட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்றொரு வழக்கில் ஆஜராக வேண்டியிருந்ததால், வெள்ளியன்று நடந்த ஐ.ஆர்.சி.டி.சி. முறைகேடு தொடர்பான வழக்கில் லாலு ஆஜர் ஆகவில்லை. இதனால் அவரை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

.