This Article is From May 22, 2019

''ஓட்டுமெஷினை தூக்கிச் செல்லும் சிறுவர்கள்!!'' - ஃபோட்டோவால் பரபரப்பு!!

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் ட்விட்டரில் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

''ஓட்டுமெஷினை தூக்கிச் செல்லும் சிறுவர்கள்!!'' - ஃபோட்டோவால் பரபரப்பு!!

ஓட்டு மெஷினில் முறைகேடு செய்ய முடியும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

Patna, Bihar:

வாக்குப்பதிவு எந்திரங்களை ஓரிடத்தில்ருந்து சிறுவர்கள் மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது போன்ற ஃபோட்டோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஃபோட்டோவை பீகாரின் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் வெளியிட்டுள்ளார். 

இந்த படத்தை வெளியிட்டு ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது-

 பீகாரில் வாக்குப்பதிவு எந்திரத்தை கொண்டு செல்லும் பணியில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதிவு செய்யப்படாத வாகனங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இது விதிகளை மீறிய செயலாகும். இந்த ஓட்டு மெஷின்கள் முசாபர்பூர் ஓட்டலுக்கு, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கொண்டு செல்லப்படுகின்றன. 

இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதற்கிடையே ஓட்டு மெஷினில் முறைகேடு செய்ய முடியும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். 

வாக்குப்பதிவின்போது வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது. மேலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. 

.