This Article is From Dec 22, 2019

மோடியும், அமித் ஷாவும் சேர்ந்து இளைஞர்கள் எதிர்காலத்தை அழித்து விட்டார்கள்: ராகுல்

இந்த நாட்டு மன்னின் முஸ்லிம்களை இந்த குடியுரிமை திருத்தச் சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் ஒன்றும் செய்ய முடியாது. இது நாட்டை இரண்டாக்க கூறப்படும் பொய் என நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மோடியும், அமித் ஷாவும் சேர்ந்து இளைஞர்கள் எதிர்காலத்தை அழித்து விட்டார்கள்: ராகுல்

CAA-க்கு எதிராக டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்தில் ராகுல் கலந்துக்கொள்ள உள்ளார். (File)

New Delhi:

மோடியும், அமித் ஷாவும் சேர்ந்து உங்கள் எதிர்காலத்தை அழித்து விட்டார்கள் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை ஆர்ப்பாட்டங்ககள் நடந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும், வேலையின்மை மற்றும் பொருளாதார மந்த நிலைக்கு எதிரான பொதுமக்களின் கோபத்தை எதிர்கொள்ள முடியாததால் நாட்டை பிளவுபடுத்துவதாக ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, அன்புள்ள இளைஞர்களே! பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித் ஷாவும் சேர்ந்து உங்கள் எதிர்காலத்தை அழித்து விட்டார்கள்.

நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்படுத்திய சேதம், வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியாததால் ஏற்பட்டுள்ள உங்கள் கோபத்தை அவர்களால் எதிர்கொள்ள முடியாது. 

அதனால் தான் மோடியும், அமித் ஷாவும், வெறுப்பின் பின்புறம் மறைந்து கொண்டு, அன்புக்குரிய நம்முடைய தேசத்தைப் பிளவுபடுத்துகிறார்கள். ஒவ்வொரு இந்தியரும் அன்போடு பதிலளிப்பதன் மூலம் மட்டுமே நாம் அவர்களை தோற்கடிக்க முடியும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முஸ்லிம்கள் தடுப்பு காவலுக்கு அனுப்பப்படுவார்கள் என்று காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் சில நக்சல்கள் தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர். உங்கள் கல்விக்காது மதிப்பளியுங்கள்.. குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருமுறை வாசித்து பாருங்கள் என்று அவர் கூறினார். 

இந்த நாட்டு மன்னின் முஸ்லிம்களை இந்த குடியுரிமை திருத்தச்சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் ஒன்றும் செய்ய முடியாது. நாட்டில் உள்ள முஸ்லிம்களை யாரேனும் தடுப்பு காவலுக்கு அனுப்பினார்களா? அல்லது இந்தியாவில் முஸ்லிம்களுக்கு தடுப்பு காவல் எதுவும் உள்ளதா? இது நாட்டை இரண்டாக்க கூறப்படும் பொய் என்று அவர் தெரிவித்தார்.

இளைஞர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை படிக்க வேண்டும் என்றும் வதந்திகளை நம்பக்கூடாது என்றும் அவர் கூறினார். இந்த குடியுரிமை திருத்தச் சட்டமானது யாரது 'குடியுரிமையையும் பறிக்காது', நீண்ட காலமாக இந்தியாவில் வாழும் மக்களுக்கு இது பயனளிக்கும். ஆனால், புதிதாக வந்த அகதிகளுக்கு இது பயனளிக்காது என்று கூறினார். 

உத்தர பிரதேசத்தில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட பெரும் வன்முறை காரணமாக இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலர் துப்பாக்கி குண்டு காயங்களாலே உயிரிழந்துள்ளனர்
என்பது தெரியவந்துள்ளது. இதேபோல், அசாம், கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வன்முறையிலும் பலர் உயிரிழந்துள்ளனர். 
 

.