எச்.ஏ.எல். நிறுவன ஊழியர்களை சந்தித்து பேசிய ராகுல் - மோடி அரசு மீது கடும் குற்றச்சாட்டு

ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பிலான ரஃபேல் விமானங்கள் வாங்கப்படுவதில் பிரதமர் மோடி ஊழல் செய்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

எச்.ஏ.எல். நிறுவன ஊழியர்களை சந்தித்து பேசிய ராகுல் - மோடி அரசு மீது கடும் குற்றச்சாட்டு

எச்.ஏ.எல்.-நிறுவனத்திடம் இருந்து ரஃபேல் ஒப்பந்தத்தை பறித்து அம்பானிக்கு அளித்து விட்டதாக புகார் கூறுகிறார் ராகுல்.

ஹைலைட்ஸ்

  • Rahul Gandhi interacted with HAL employees outside its HQ in Bengaluru
  • Mr Gandhi said he was "standing in support" of the state-run HAL
  • Mr Gandhi said the Rafale contract was 'gifted' to Anil Ambani
Bengaluru:

ரஃபேல் போர் விமான விவகாரத்தில் முக்கிய நிகழ்வாக, முன்னர் ரஃபேல் விமானத்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படும் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் (எச்.ஏ.எல்) நிறுவனத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்றார். இந்த நிறுவனம் கர்நாடக மாநிலம் பெங்ளூருவில் இயங்கி வருகிறது.

அங்கு பணியாளர்களை சந்தித்து பேசிய ராகுல் காந்தி பின்னர் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

நான் இங்கு பேசுவதற்காக வரவில்லை. இங்கு பணியாற்றும் ஊழியர்களின் மனக்குமுறலை கேட்பதற்காகவே வந்துள்ளேன். இந்திய சுதந்திரம் அடைந்ததன் மூலமாக முக்கிய சில அம்சங்களை நாம் பெற்றோம். அந்த வகையில் ஐ.ஐ.டி. என்பது இந்தியாவின் உயர் கல்வியை போதிக்கும் மையமாக திகழ்கிறது. இதேபோன்று எச்.ஏ.எல். நிறுவனம் நாட்டின் விமானப்படை, விமான தயாரிப்புகளில் முன்னிணியில் விளங்குகிறது.

நாட்டைப் பாதுகாக்க எச்.ஏ.எல். அமைப்பு முக்கிய பொறுப்பை எடுத்துக் கொள்கிறது. எச்.ஏ.எல். என்பது நாட்டின் முக்கிய அங்கம். விமானத்துறையில் சீனாவும், இந்தியாவும்தான் அமெரிக்காவுக்கு போட்டி கொடுக்க முடியும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியிருந்தார். அதற்கு எச்.ஏ.எல்-ன் சிறப்பான செயல்பாடுதான் காரணம்.

எச்.ஏ.எல்லிடம் இருந்து ரஃபேல் விமான ஒப்பந்தத்தை பறித்து அம்பானிக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கியுள்ளார். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.