This Article is From Feb 14, 2019

மோடிக்கு எதிராக ராகுல் – மம்தா – கெஜ்ரிவால் கூட்டணி அமைவற்கு பேச்சுவார்த்தை

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவால் இல்லத்தில் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மோடிக்கு எதிராக ராகுல் – மம்தா – கெஜ்ரிவால் கூட்டணி அமைவற்கு பேச்சுவார்த்தை

டெல்லியில் சரத்பவார் இல்லத்தில் எதிர்கட்சியினர் சந்திப்பு

ஹைலைட்ஸ்

  • சரத் பவார் இல்லத்தில் சந்திப்பு நடந்துள்ளது
  • சந்திரபாபு நாயுடுவும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்
  • ராகுல், மம்தா, கெஜ்ரிவால் கூட்டணி அமைய வாய்ப்பு
New Delhi:

மத்திய பாஜக அரசுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பதற்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் முயற்சி எடுத்துள்ளார். அவரது இல்லத்தில் வைத்து ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த 3 கட்சிளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக காங்கிரசுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே பிளவு அதிகரித்திருக்கிறது. டெல்லியில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசை ஆம் ஆத்மிதான் அகற்றியது. காங்கிரசின் மற்றொரு கோட்டையாக இருக்கும் பஞ்சாபில், அக்கட்சிக்கு தலைவலி கொடுக்கும் முக்கிய கட்சியாக ஆம் ஆத்மி மாறியுள்ளது.

மம்தாவை பொறுத்தவரையில் மேற்கு வங்கத்தில் காங்கிரசுக்கு அடித்தளமே இருக்க கூடாது என்பதில் தெளிவாக உள்ளார். அவர் நடத்திய எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற மாநாட்டுக்கு ராகுல் காந்தி வராமல் பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் குறைந்தபட்ச திட்டத்தின் அடிப்படையில் அதாவது பாஜக அரசை எதிர்ப்பதில் அனைத்து கட்சிகளுக்கும் கருத்து ஒற்றுமை இருக்கிறது என்பதை மையமாக வைத்து, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு செயல்பட தீர்மானித்துள்ளன.

இந்த கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பங்கேற்றுள்ளார். ஆந்திராவில் அவரது கட்சியுடன் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமைக்காது என்று கூறப்பட்ட நிலையில் அவரும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கெடுத்துள்ளார்.

பேச்சுவார்த்தை குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், ‘'இனி வரும் நாட்களில் நாங்கள் ஒன்பட்டு செயல்படுவோம். மாநிலத்தில் திரிணாமூலுக்கும், பிரச்னை இருந்தாலும் தேசிய அளவில் ஒன்றுபட்டு தேர்தலை எதிர்கொள்வோம். நாட்டின் நலனுக்காக எனது வாழ்க்கையையே நான் தியாகம் செய்துவிட்டேன். அதற்காக எதையும் தியாகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்'' என்றார்.

.