This Article is From Dec 28, 2018

134வது ஆண்டு கொண்டாட்டம்; மன்மோகன் குறித்த பயோ-பிக்: காங்கிரஸில் பரபர!

காங்கிரஸ் கட்சித் தொடங்கப்பட்டு 134 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்

134வது ஆண்டு கொண்டாட்டம்; மன்மோகன் குறித்த பயோ-பிக்: காங்கிரஸில் பரபர!

புது டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த கேக் வெட்டிக் கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது

New Delhi:

காங்கிரஸ் கட்சித் தொடங்கப்பட்டு 134 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். 

புது டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த கேக் வெட்டிக் கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 134வது ஆண்டு கொண்டாட்டம் குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டரில், 'பல்லாண்டுகளாக காங்கிரஸ் கட்சியை நிலைத்திருக்கச் செய்ய உழைத்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை கொண்டாடுவோம்' என்று பதிவிட்டுள்ளார். 

முன்னாள் பிரமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரதமராக பதவி வகித்ததை வைத்து ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்' என்ற பயோ-பிக் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் ஜனவரி 11 ஆம் தேதி வெளிவர உள்ளது. நேற்று படத்தின் டிரெய்லர் வெளியாகி தேசிய பேசு பொருளாக மாறியுள்ளது. 
 

தொடர்ந்து பல்வேறு தரப்பிலும் இந்த டிரெய்லர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. 2004 முதல் 2008 வரை மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு எழுதிய ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்' என்ற ஆங்கில புத்தகத்தைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது மன்மோகனிடம், ‘உங்களைப் பற்றி ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதே, அது குறித்து என்ன நினைக்கிறீர்கள்..?' என்று கேட்கப்பட்டது. அதற்கு சிங், எந்த வித பதிலும் சொல்லாமல் அமைதியாக நகர்ந்து சென்றுவிட்டார்.

காங்கிரஸ் தரப்பில், இந்தப் படம் வெளிவருவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பாஜக திரைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து ப்ரமோஷன் கொடுத்துள்ளது. 


 

.