This Article is From Nov 14, 2019

ரஃபேல் ஒப்பந்தம் செல்லும் என்கிற உத்தரவுக்கு எதிரான சீராய்வு மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்

ரஃபேல் ஒப்பந்தம் செல்லும் என்கிற உத்தரவுக்கு எதிரான சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஃபேல் ஒப்பந்தம் செல்லும் என்கிற உத்தரவுக்கு எதிரான சீராய்வு மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
New Delhi:

ரஃபேல் ஒப்பந்தம் செல்லும் என்கிற உத்தரவுக்கு எதிரான சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடியில் வாங்குவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2016-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி ஒப்பந்தம் போட்டது.

இந்த ஒப்பந்தத்தில், பல்வேறு ஊழல் நடந்துள்ளது என குற்றம்சாட்டப்பட்டது. ரஃபேல் போர் விமான பேரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உச்ச நீதமன்றத்தில் 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா, வினீத் தண்டா, ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங், முன்னாள் மத்திய அமைச்சசர் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் தாக்கல் செய்த இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது.

விசாரணை முடிவில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடந்திருப்பதற்கு ஆதாரம் இல்லை என கூறி, 6 வழக்குகளையும் தள்ளுபடி செய்து கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது. அனைத்துதரப்பு வாதத்தையும் கேட்டு முடித்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மே மாதம் 10ல் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இன்று 36 ர ஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடக்கவில்லை என்ற தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

.