This Article is From Jan 24, 2019

ஸ்டெர்லைட் குறித்து கேள்வியெழுப்பிய பத்திரிகையாளர்கள்; ஜூட் விட்ட முதல்வர்!

மாநாடு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்பாளர்கள் என்று எதிர்பார்த்து வந்த முதல்வருக்கு, கேட்கப்பட்ட கேள்விகள் சற்று அதிர்ச்சியளித்தது.  

ஸ்டெர்லைட் குறித்து கேள்வியெழுப்பிய பத்திரிகையாளர்கள்; ஜூட் விட்ட முதல்வர்!

சென்னையில் இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று முடிவடைந்தது

ஹைலைட்ஸ்

  • ஸ்டெர்லைட் ஆலை இனி திறக்கப்படாது, தமிழக அரசு
  • ஆலையை மீண்டும் திறக்க ஸ்டெர்லைட் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது
  • அரசாணை வெளியிட்டு ஆலையை சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசு மூடியது

சென்னையில் இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று முடிவடைந்தது. இந்நிலையில், இந்த மாநாட்டின் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்ய புரிந்தணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மாநாடு முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர்.

அப்போது பத்திரிகையாளர்கள், “ஸ்டெர்லைட் ஆலையை சமீபத்தில்தான் அரசாணை வெளியிட்டு மூடியது தமிழக அரசு. தற்போது நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்ற நோக்கில் மாநாடு நடக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது?” என்றனர். அதற்கு முதல்வர், “ஸ்டெர்லைட் ஆலையை மூடியது, மக்களின் விருப்பத்திற்கு ஏற்று செய்யப்பட்டது. அந்த ஆலை, மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது. அதனால், மக்கள் கோரிக்கை வைத்தனர். அவர்கள் கோரிக்கைக்கு ஏற்ப அரசு செயல்பட்டது” என்றார். 

தொடர்ந்து பத்திரிகையாளர்கள், “தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் குறித்து…” என்று கேள்வியை முடிப்பதற்குள் முதல்வர், “இன்று தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு. அது பற்றி மட்டும் பேசுவோம்…” என்று சொல்லியபடி இடத்தை காலி செய்தார். 

மாநாடு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்பாளர்கள் என்று எதிர்பார்த்து வந்த முதல்வருக்கு, கேட்கப்பட்ட கேள்விகள் சற்று அதிர்ச்சியளித்தது.  
 

.