This Article is From Oct 24, 2018

ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : பஞ்சாப் முதல்வர்

விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அமிர்தசரஸ் ரயில் விபத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் கூறியுள்ளார்

ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : பஞ்சாப் முதல்வர்

தசரா பண்டிகையின்போது நடந்த ரயில் விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர்.

Chandigarh:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்த ரயில் விபத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ரயில் விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அந்த அறிக்கையை எதிர்பார்த்துள்ளோம். விபத்துக்கான காரணம் குறித்து அறிந்த பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார்.

தசரா பண்டிகையின்போது நடந்த ரயில் விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர். இதற்கு விழாவை ஏற்பாடு செய்த அமிர்தசரஸ் கவுன்சிலரின் மகனே காரணம் என்று ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனை மறுத்த அந்த நபர், மக்கள் ஒற்றுமைக்காக தசரா பண்டிகையை நடத்தியதாகவும், உரிய அனுமதி பெற்று விழா நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
 

.