மீண்டும் ட்ரெண்டான பிரியா வாரியர்... இந்த முறை எதற்குத் தெரியுமா?

விரைவில் அது திருத்தம் செய்யப்பட்டு இருந்தாலும் நெட்டிசன்கள் அதைக் கேலிசெய்து வருகின்றனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மீண்டும் ட்ரெண்டான பிரியா வாரியர்... இந்த முறை எதற்குத் தெரியுமா?

பிரியா பிரகாஷ் வாரியர் (courtesy priya.p.varrier)


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. பிரியா வாரியர் இண்ஸ்டாகிராம் பக்கத்தில் இட்ட பதிவு ட்ரோலாகியுள்ளது
  2. தவறு விரைவில் திருத்தப்பட்டு விட்டது
  3. 2018ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபராக பிரியா வாரியர் இருந்தார்

பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு கண் சிமிட்டலில் இணைய உலகில் வைரலாகி விட்டார். தற்போது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்த சின்ன சிறிய தவறுக்காக மீண்டும்  வைரலாகி வருகிறார். ஒரு பெர்ஃவ்யூம் விளம்பரத்தில் நடித்திருந்தார். அந்த புரோமோஷன் விளம்பரத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார். அந்த கேப்ஷன் அவரின் பெயரோடு இணைந்து வந்துள்ளது. காபி-பேஸ்ட் செய்வதில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ள நிலையில், விரைவில் அது திருத்தம் செய்யப்பட்டு இருந்தாலும் நெட்டிசன்கள் அதைக் கேலிசெய்து வருகின்றனர். சிலர் ‘அன்ஃபாலோ செய்து விடுங்கள் தன்னை ட்ரோல் செய்ய வேண்டும் என்பதற்காக இதை செய்வதாக' கமெண்ட் செய்து வருகின்றனர். 

பிரியா வாரியரின் இண்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்க்ரீன் ஷாட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

9r366rn

பிரியா வாரியர் இண்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்கிரின் ஷாட்

இதற்கு முன் நடிகை திஷா பட்டானி விளம்பர வீடியோவுக்கு கேப்ஷனை போடுவதற்கு பதிலாக தன்னுடைய பெர்ஷனல் மெசேஜ் ஒன்றினை காபி-பேஸ்ட் செய்து விட்டார். நெட்டிசன்கள் “இரண்டு முறை படித்து விட்டு போஸ்ட் செய்யுங்கள்” என்று கோல்டன் ரூலை சொல்லினார்கள்.

பிரகாஷ் வாரியர் தான் நடித்த ஒரு ஆதார் லவ் என்ற படத்தில் புரோமோஷனல்  காட்சில் கண் சிமிட்டுவது போன்ற காட்சி இடம் பெற்றது. இணையத்தில் பலரும் இந்த காட்சியை விரும்பி பார்த்தனர். கண் சிமிட்டும் காட்சி வெகுவாக பிரபலமடைந்தது. அதன் பின் அந்தப் படம் வெளியான நேரத்தில் முத்தக் காட்சிக்கும் பிரியா வாரியர் ட்ரோல் செய்யப்பட்டார்.

2018ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபராக பிரியா வாரியர் இடம் பெற்றார்.லோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................