This Article is From Jan 09, 2019

பாஜகவினர் மத்தியில் பிரபலமாகும் 'நமோ அகெய்ன்' சேலஞ்ச் - பிரதமர் மோடி பாராட்டு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கட்சியை விளம்பரப்படுத்தும் பணியில் பாஜகவினர் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். உடைகள், ஆப்கள் என பிரசார பட்டியல் நீள்கிறது.

பாஜகவினர் மத்தியில் பிரபலமாகும் 'நமோ அகெய்ன்' சேலஞ்ச் - பிரதமர் மோடி பாராட்டு

NaMo Again Hoodie: பாஜக எம்.பி. அனுராக் தாகூர் நமோ அகெய்ன் சேலஞ்சை ஏற்று டி-ஷர்ட் அணிந்துள்ளார்.

New Delhi:

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவினர் மத்தியில் 'நமோ அகெய்ன்' சேலஞ்ச் பிரபலம் அடைந்து வருகிறது. வட இந்தியாவில் கடும் குளிர் நிலவுகிறது. இதற்கு ஏற்பட ஸ்வெட்டர்களில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று பொருள்படும் வகையில் 'நமோ அகெய்ன் (NaMo Again)' என்ற வாசகங்களை இடம்பெறச் செய்து அவற்றை பாஜகவினர் அணிந்து வருகின்றனர்.

பாஜக எம்.பி.யான அனுராக் தாகூர் இதுபோன்ற ஸ்வெட்டரை அணிந்து, அதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனை ரிட்வீட் செய்த மோடி, பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இதையடுத்து நமோ அகெய்ன் சேலஞ்ச் பாஜகவினர் மத்தியில் தீவிரம் அடைந்து வருகிறது.

மோடியின் ஆதரவாளர்கள் இந்த ஸ்வெட்டர்களை அணிந்து அவற்றை புகைப்படம் பிடித்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். சமூக நீதித்துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் இதுபோன்ற புகைப்படத்தை எடுத்து பதிவிட்டுள்ளார். நரேந்திர மோடிதான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். அதற்காக நாம் உறுதி எடுத்துக் கொள்வோம் என்று தவார் சந்த் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
 

rlrio19

Union Minister Thawar Chand Gehlot was the next to take up the hoodie challenge.

இதேபோன்று மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான், மத்திய அமைச்சர்கள் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், நரேந்திர சிங் தோமர், ராதா மோகன் சிங், அர்ஜூன் ராம், கட்சியினி பொதுச் செயலாளர்கள்கைலாஷ் விஜய் வர்கியா உள்ளிட்டோரும் நமோ அகெய்ன் டி-ஷர்ட் மற்றும் ஸ்வெட்டர்களை அணிந்துள்ளனர்.


அனுராத் தாகூர் தனது 2-வது ட்விட்டில், ''நான் நமோ அகெய்ன் டி-ஷர்ட்டை அணிந்து விட்டேன். நீங்கள் எப்போது அணியப் போகிறீர்கள்?'' என்று பதிவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல் மத்திய அமைச்சர்கள் வரை பெரும்பாலான பாஜகவினர் நமோ அகெய்ன் டி-ஷர்ட்டை அணிந்துள்ளனர்.
 


இதேபோன்று நமோ ஆப்-ம் பிரசாரத்திற்காக தொடங்கப்பட்டுள்ளது. அதில் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த ஆப் வரவிருக்கும் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

நரேந்திர மோடியை சுருக்கமாக குறிப்பிடும் வகையில் நமோ என்ற பெயரில் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது ஆப் தொடங்கப்பட்டது. இது கட்சியின் தேர்தல் பிரசாரத்திற்கு பெரிய அளவில் உதவியது குறிப்பிடத்தக்கது.

(With inputs from ANI)

.