Read in English
This Article is From Nov 29, 2018

‘ராஜாவுக்கு எதிராக போரிடும் எளியவன்..!’- ராகுலைக் குறிவைக்கும் மோடி

காங்கிரஸுக்காக அதன் தலைவர் ராகுல் காந்தியும், பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியும், ராஜஸ்தானில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Advertisement
இந்தியா
Nagaur:

ராஜஸ்தானில் இன்னும் சில நாட்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், களத்தில் இருக்கும் இரண்டு பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக இடையில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸுக்காக அதன் தலைவர் ராகுல் காந்தியும், பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியும், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் நாக்பூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, ‘ராஜாவுக்கு எதிராக போட்டியிடும் எளியவன் நான்' என்று ராகுல் காந்தியை மறைமுகமாகத் தாக்கிப் பேசியுள்ளார். 

அவர் மேலும், ‘நாங்கள் எங்கள் பேரன்களுக்கும் பேத்திகளுக்கும் நன்மை பெற உங்களிடம் வாக்குக் கேட்கவில்லை. உங்களின் கனவுகளை நனவாக்க, பாஜக-வுக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறோம்' என்று பேசினார். 

Advertisement

காங்கிரஸ் குறித்து மோடி பேசுகையில், ‘நான்கு தலைமுறைகளாக மக்களுடன் தொடர்பில் இல்லாதவர்களுக்கு அவர்களின் கஷ்டங்களை எப்படி புரிந்து கொள்ள முடியும். எங்கள் ஒரே நோக்கம் நல்லாட்சி கொடுப்பது தான்' என்று விமர்சித்தார். 

வரும் டிசம்பர் 7 ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வசுந்தர ராஜே தலைமையிலான பாஜக, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முயன்றுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ், தங்களுக்கு இந்த முறை வெற்றி கிட்டும் என்று எதிர்பார்க்கிறது. 

Advertisement
Advertisement