'விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ. 12,000 கோடியை நேரடியாக செலுத்தியது மாபெரும் சாதனை' - மோடி

விவசாயிகளின் கடின உழைப்பு மற்றும் அரசின் கொள்கைகள் காரணமாக உணவு உற்பத்தியில் இந்தியா உலகின் முதல் 3 நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

'விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ. 12,000 கோடியை நேரடியாக செலுத்தியது மாபெரும் சாதனை' - மோடி

3-வது உலக உருளைக்கிழக்கு விவசாய மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய காட்சி.

Gandhinagar:

இந்திய விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ. 12 ஆயிரம் கோடியை நேரடியாக செலுத்தியது மாபெரும் சாதனை என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். இந்த தொகை மொத்தம் 6 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. 

குஜராத் மாநிலம் காந்தி நகரில் 3-வது சர்வதேச உருளைக்கிழங்கு விவசாய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக கலந்து கொண்டார். 

நிகழ்ச்சியில் பேசிய மோடி விவசாயிகளின் கடின உழைப்பு மற்றும் அரசின் கொள்கைகள் காரணமாக உணவு உற்பத்தியில் இந்தியா உலகின் முதல் 3 நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டார். 

Newsbeep

'விவசாயிகளின் வருமானத்தை 2022-க்குள் இரட்டிப்பாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் விவசாயிகன் கடின உழைப்பு ஆகியவை உணவு உற்பத்தியில் இந்தியாவை உலகின் முதல் 3 இடங்களுக்குள் கொண்டு சென்றுள்ளது.

இம்மாத தொடக்கத்தில் ரூ. 12 ஆயிரம் கோடியை 6 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தினோம். இது ஒரு புதிய சாதனை' என்று மோடி பேசினார்.