This Article is From Mar 10, 2020

கொரோனா பீதி: வாரணாசி கோவிலில் சாமி சிலைகளுக்கு முகக்கவசம்!

முகக்கவசம் அணிந்தபடி, பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் சாமி தரிசனம் மேற்கொள்கின்றனர்.

கொரோனா பீதி: வாரணாசி கோவிலில் சாமி சிலைகளுக்கு முகக்கவசம்!

கொரோனா காரணமாக பக்தர்கள் யாரும் சாமி சிலையை தொட வேண்டாம் என அர்ச்சகர் கேட்டுக்கொண்டார்.

ஹைலைட்ஸ்

  • சாமி சிலைக்கு முகக்கவசம் அணிவித்த அர்ச்சகர்
  • முகக்கவசம் அணிந்தபடி, பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் சாமி தரிசனம்
  • கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை
Varanasi:

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து மக்கள் அனைவரும், முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், வாரணாசி கோவிலில் அர்ச்சகர் ஒருவர் சாமி சிலைகளுக்கு முகக்கவசம் அணிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கோவில் அர்ச்சகர் கிருஷ்ண ஆனந்த் பாண்டே கூறும்போது, நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதனால், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், விஸ்வநாதர் சிலைக்கு முகக்கவசம் அணிவித்துள்ளோம். 

குளிர்காலங்களில் சிலைகளில் துணிகளைப் போர்த்துவது போலவும், வெயில் காலங்களில் ஏசி அல்லது மின்விசிறி போடுவது போலவும், தற்போது சாமி சிலைகளுக்கு முகக்கவசம் அணிவித்துள்ளோம். 

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் சாமி சிலைகளைத் தொடக்கூடாது என்றும் அந்த அர்ச்சகர் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து மேலும், அவர் கூறும்போது, கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சாமி சிலைகளைப் பொதுமக்கள் யாரும் தொடக்கூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளோம். அப்படி பொதுமக்கள் சிலைகளைத் தொடும்போது, வைரஸ் மற்றவர்களுக்கும் பரவி பலர் பாதிப்படைவார்கள் என்று அந்த அர்ச்சகர் கூறினார். 

தொடர்ந்து, அந்த கோவிலில் பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் முகக்கவசம் அணிந்தபடியே, சாமி தரிசனம் மேற்கொள்கின்றனர். 

.