This Article is From Oct 12, 2019

Modi-Xi Meet: கேட்பாரற்றுக் கிடந்த மாமல்லபுரம் ஏரி, மோடி - ஜின்பிங் வருகையால் உயிர்பெற்றது!

PM Modi-Xi Jinping Meet: தற்போது ஏரி முழுவதுமாக மீட்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழைக்கு அது தயாராக உள்ளது. 

Modi-Xi Meet: கேட்பாரற்றுக் கிடந்த மாமல்லபுரம் ஏரி, மோடி - ஜின்பிங் வருகையால் உயிர்பெற்றது!

PM Modi-Xi Jinping Meeting in Mahabalipuram: வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் இந்த ஏரி அமைந்திருந்தாலும், கடந்த 20 ஆண்டுகளாக அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது

Mamallapuram:

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஸி ஜின்பிங்கின் வருகை, மாமல்லபுரம் சுத்தமாக மட்டுமல்ல, அங்கிருக்கும் ஒரு ஏரி உயிர்பெறவும் உதவியுள்ளது. 

மோடி - ஜின்பிங் வருகையையொட்டி, மாமல்லபுரத்தில் மிகப் பெரும் அழகுபடுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் மூலம் மகாபலிபுரத்தின் பெரும்பான்மையான பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டன, சாலையோரம் இருந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. அதேபோல பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் பராமரிப்பின்றி கிடந்த கோனேரி சீரமைக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தின் வெண்ணைக் கல்லுக்கு அருகில் உள்ள கலங்கரை விளக்கத்துக்குப் பின்புறம் இந்த கோனேரி அமைந்துள்ளது.  

வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் இந்த ஏரி அமைந்திருந்தாலும், கடந்த 20 ஆண்டுகளாக அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. இதனால், அந்த ஏரி நாளுக்கு நாள் தனது பொலிவை இழந்து வந்தது. 

இந்நிலையில், மோடி - ஜின்பிங் இடையிலான முறைசாரா சந்திப்பு குறித்து செய்தி வந்தது. இதைவைத்து, ஏரியை சரிசெய்து விடலாம் என்று இ.எப்.ஐ என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனமும், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும் முடிவெடுத்தது. சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர்தான் ஏரியை சீரமைக்கும் பணி கையிலெடுக்கப்பட்டது. 

தற்போது ஏரி முழுவதுமாக மீட்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழைக்கு அது தயாராக உள்ளது. 

.